மன்னார்குடி
குறுவை சாகுபடி தொடங்குவதற்கு விதைகள் தட்டுப்பாடு உள்ளது. தனியார் விதை வியாபாரிகள் தரமற்ற , முளைப்பு திறன் அற்ற விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி ஏமாற்றி வருகின்றனர் எனவே வேளாண் துறை அதிகாரிகள் தரமான விதைகளை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் மன்னார்குடியில் பி.ஆர் பாண்டியன் அரசுக்கு வேண்டுகோள் …
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்..அப்போது காவிரி டெல்டாவில் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டு குறுவை சாகுபடி மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
மேட்டூர் அணையில் தண்ணீர் 80 அடி உள்ள நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகவிற்கு உத்தரவிட்டு உள்ள அடிப்படையில் தண்ணீரை பெற்று தராததால் மேட்டூர் அணை நிரம்பாமல் உள்ளது.
தமிழக அரசு புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்ள நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அணுகி உடனடியாக கர்நாடக தரவேண்டிய மாதாந்திர அடிப்படையிலான தண்ணீரை பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
தண்ணீரை முழுமையாக பெற்று 100 அடிக்கு குறைவில்லாத வகையில் தண்ணீரை திறப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். காவேரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி தொடங்குவதற்கு விதைகள் தட்டுப்பாடு உள்ளது.
தனியார் விதை வியாபாரிகள் தரமற்ற விதைகளை முளைப்பு திறன் அற்ற விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி ஏமாற்றி வருகின்றனர். எனவே வேளாண் துறை அதகிகாரிகள் தரமான விதைகளை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் தரமற்ற விதைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
இந்தியாவில் மிகப்பெரிய அளவில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் குறுவை சாகுபடி துவங்க உள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு தேவையான உரங்களை இருப்பு வைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி உரங்களை இருப்பு வைக்க வேண்டும்.
குறிப்பாக உற்பத்தி நிறுவனங்கள் கட்டாயமாக இடு இணை பொருட்கள் வாங்கினால் தான் யூரியா , டிஏபி, பொட்டாசு உள்ளிட்ட உரங்களை பெற முடிகிற சூழ்நிலை இருந்து வருகிறது ஆனால் தமிழக அரசு விநியோகஸ்தர்களையும் வணிகர்களையும் மிரட்டுகிறது தவிர உரம் உற்பத்தி செய்கின்ற நிறுவனங்கள் ஒரு மூட்டை யூரியா கிலே ரூ 260 என்றால் ரூ 500 முதல் ரூ 200 வரை இடுபொருட்களுக்கு கொடுத்தால் தான் உரத்தை வாங்க முடிய நிலை உள்ளது.
அப்படி இணை பொருட்களை முன்கூட்டியே கொடுக்கிற வினியஸ்தர்களுக்கும் வணிகர்களுக்கும் யூரியா டிஏபி பொட்டாஸ் உள்ளிட்ட உரங்களை அனுப்பி வைக்கிறார்கள். எனவே உடனடியாக தமிழக அரசு, மத்திய அரசு வேளாண்துறை, உரத்துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உற்பத்தி நிறுவனங்களுக்கு இடு இணை பொருட்கள் விற்பனை கட்டாயமாக்கப்படுவதை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு யாரும் எதிர்பார்க்காத நிலையில் லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் 10 பைசா வரை உயர்த்தி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
நெருக்கடியான காலகட்டத்தில் டீசல் பெட்ரோல் விலை உயர்வால் ஒட்டுமொத்த பொருட்கள் விளையும் பெறப்போகிறது. விலைவாசி உயர்ந்தால் மக்கள் வாழ முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள். வேளாண்மையை தொடர் முடியாத நிலை ஏற்படும் எனவே மத்திய அரசாங்கம் உடனடியாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார்.