திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், 16.05.2026 -ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரிய செயற்பொறியாளர் (மேற்கு) வ.சரவணன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை, ஊசாம்பாடி, வேங்கிக்கால், நொச்சிமலை உள்ளிட்ட பல பகுதிகளிலும், தாமரை நகர், ஆடையூர், மல்லவாடி, நாயுடுமங்கலம் துணை மின் நிலையங்களை சார்ந்த பகுதிகளிலும் மின்தடை அமலில் இருக்கும். அவசர மற்றும் எதிர்பாராத காரணங்களால் நேர மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை வேங்கிக்கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி