தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நல வாரியம் சார்பில் அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது விழா தூய்மை பணியாளர்கள் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி தலைமையில் துணை தலைவர் கனிமொழி பத்மநாபன்,தாட்கோ மாவட்ட மேலாளர் ரஞ்சித் குமார்,நகர்மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன்,கமிஷனர் அமுதா,நகர்மன்ற துணை தலைவர் அருள் வடிவு முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் 96 தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அடையாள அட்டை மற்றும் தூய்மை பணியாளர்கள் வாரிசுதாரர்களுக்கு கல்வி ஊக்க தொகையாக ரூ.27,500/- காசோலையாக வழங்கப்பட்டது.இதுபோக தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது வாரிசுதாரர்களுக்கு கல்விக் கடன்,கல்வி ஊக்கத்தொகை, பொருளாதார கடன் உதவி ஆகியவை தாட்கோவின் மூலமாக வழங்கப்பட்டது.
தூய்மை பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதியை அப்போதைய ஒப்பந்ததாரர் தங்களது கணக்கில் வரவு வைக்காமல் மோசடி செய்துள்ளார்.அதனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக் கொண்ட நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.தனியாரிடம் ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் அனைவரும் அரசின் நிரந்தர பணியாளர்களாக நியமிக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் அஷ்ரப் அலி,நகர செயலாளர் முனுசாமி,நகராட்சி கவுன்சிலர்கள் ஸ்ரீராம்,காளியம்மாள்,கவிதா,சுமதி,உமாராணி,புவனேஸ்வரி,அனிதா மற்றும் நகராட்சி ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.