கம்பம் நகரில் காசி விஸ்வநாதர் திருக்கோயில் கும்பாபிஷேக திருவிழாவில் அன்னதானத்திற்கான முழுச் செலவையும் ஏற்ற வாணியர் சங்க மாவட்டத் தலைவர் தேனி மாவட்டம் கம்பம் நகரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு காசி விஸ்வநாதர் விசாலாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வரும் டிசம்பர் 1.12.2025. திங்கட்கிழமை கோலாகலமாக நடைபெற உள்ளது
இந்த விழாவின் மணி மகுடமாய் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைத்து பக்தர்களுக்கும் அறுசுவை உணவு 20 ஆயிரம் நபர்களுக்கு அன்னதானம் வழங்கும் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்ட தென்னிந்திய வாணியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவரும் தேனி மாவட்ட வாணியர் சங்க மாவட்ட தலைவருமான ஆர்.சுந்தரவடிவேல் பங்கேற்று அன்னதானத்திற்கான விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் அறங்காவலர்கள் கே. ஆர். ஜெய பாண்டியன் முருகேசன் ஆகியோர் தலைமையில் கம்பம் காசி விஸ்வநாதர் திருக்கோயில் வளாகத்தில் நடைபெற்றது
இந்த கூட்டத்தில் தேனி மாவட்ட கம்பம் வாணியர் சமுதாய மக்கள் சார்பாக கம்பம் நகர் தெற்கு வாணியர் சங்கத் தலைவர் எல் ராஜா என்ற பாலசுப்ரமணியன் வடக்கு வட்ட வாணியர் சங்கத் தலைவர் ஜெயபாலன் மாவட்ட செயலாளர் கனகு என்ற மாசாணம் மாவட்ட பொருளாளர் சி.எஸ். சேகர் உள்ளிட்ட தேனி மாவட்ட வாணியர் சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்