ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100 வருட பரிசுத்த அன்பை நினைவுகூரும் வகையில்,கோவையில் மாபெரும் தெய்வீக கண்காட்சி
நவம்பர் 15,16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இதில், தெய்வீக அன்பின் செயல்பாட்டில் 100 ஆண்டுகள்” எனும் தலைப்பில் அவரது வாழ்வியல் சூழல்களை தத்ரூபமாக காட்சி படுத்த உள்ளதாக ஒருங்கிணைப்பாளர்கள் தகவல்
கோவையில் முதன் முறையாக ஸ்ரீ சத்யசாய் திவ்ய சரிதம் எனும் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் 100 வருட கால வாழ்வியல் தொடர்பான கண்காட்சி சாய்பாபாகாலனி பகுதியில் அமைந்துள்ள நாக சாய் மந்திர் ஆலய வளாகத்தி் உள்ள சாய்தீப் மண்டபத்தில் நடைபெற உள்ளது..
ஸ்ரீ சாய் சாக்ஷத்காரம் அறக்கட்டளை,ஸ்ரீ சத்ய சாயி மாருதி சேவா அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ நாக சாயி அறக்கட்டளை ஆகியோர் இணைந்து நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள இதற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நாக சாய் மந்திர் ஆலயத்தில் நடைபெற்றது..
இதில் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் நாகசாய் டிரஸ்ட் நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், மற்றும் பாலசுப்ரமணியம், ஸ்ரீ சாய் சாக்ஷத்காரம் அறக்கட்டளை நிர்வாகிகள் சுந்தர்ராமன்,கோவிந்தராஜன்,மாருதி சேவா டிரஸ்ட் மேகநாதன் சாய் மற்றும் சமூக ஆர்வலர் அருணாச்சலம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர்..
கோவையில் முதன் முறையாக பிரம்மாண்டமான தெய்வீகக் கண்காட்சியாக நடைபெற உள்ள இதில்,பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் எல்லையற்ற அன்பு மற்றும் நிபந்தனையற்ற கருணையின் தெய்வீக மரபை மனிதகுலத்திற்கு நினைவூட்டும் வகையில் பகவான் சத்ய சாயி பாபாவின் வாழ்க்கை, செய்தி, அற்புதங்கள் மற்றும் அவரது உலகளாவிய நோக்கம், தன்னலமற்ற அன்பு மற்றும் சேவை ஆகியவற்றை தத்ரூபமாக காட்சி படுத்த உள்ளதாக கூறினர்..
குறிப்பாக பகவான் பாபாவின் வாழ்க்கையின் அரிய காட்சிகள், லீலைகள், பகவான் பாபாவின் சேவைத் திட்டங்களின் மல்டிமீடியா காட்சிப்படுத்தல்கள்; இளைஞர்கள், பக்தர்கள் மற்றும் ஆன்மீக தேடுபவர்களுக்கென பகவான் பாபாவின் தனிப்பட்ட உடைமைகள் மற்றும் தெய்வீகப் பொக்கிஷங்கள்.ஆகியவற்றை பக்தர்கள் நேரடியாக கண்டு அருள் பெற முடியும் என தெரிவித்தனர்…