தவெக தலைவரும், நடிகருமான விஜய்யை தூத்துக்குடியில், கடுமையாக சாடிய விஜயின் முன்னாள் மேலாளரும், புலி பட தயாரிப்பாளரும், திமுகவை சேர்ந்த பி.டி.செல்வகுமார்..
தூத்துக்குடி, தமிழ் சாலையில் உள்ள பிரஸ் கிளப் அலுவலகத்தில் தமிழக வெற்றி கழக தலைவரும், நடிகருமான விஜயின் முன்னாள் மேலாளரும், சமீபத்தில் திமுகவில் சேர்ந்த புலி பட தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்..
அப்போது அவர் கூறுகையில், நடிகர் விஜய்க்கும், தந்தை சந்திரசேகருக்கும் சுமுகமான உறவு இல்லை.. தந்தை சந்திரசேகர் தான் மகன் வளர்ச்சிக்கு முழு காரணம், முக்கிய காரணம்.. ஆனால் சந்திரசேகருக்கு எந்த இடத்திலும் முக்கியத்துவம் இல்லை.. விஜய் கூட இருக்கக்கூடிய உறவை முறிப்பதற்கு சந்திரசேகர் விரும்ப மாட்டார்.. ஆனால் மகன் விஜய் தந்தை சந்திரசேகரை விட்டுக் கொடுத்து விட்டார்..
ஜனநாயகன் படத்தை பொறுத்தவரை படப்பிடிப்பு ஆறு மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. சென்சார் பிரச்சினையை தீர்க்க வேண்டியது படக்குழு, சென்சார் பிரச்சனையில் ஒரே ஒரு உறுப்பினருக்கு மட்டுமே மாறுபட்ட கருத்து இருந்திருக்கிறது. இதனை படக்குழுதான் சரி செய்து இருக்க வேண்டும்.. பழி போடுவது ஈசி.., ஆனால், மாநில அரசுக்கும், சென்சாருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது. திமுக, பாஜக யாரும் படத்தை தடுக்கவில்லை. ஆர்கே செல்வமணி படம், விஸ்வரூபம் போன்ற பல படங்கள் ரிலீஸ் பண்ண முடியாமல் இருந்துள்ளது. அதே போன்று தான் ஜனநாயகன் படமும்.. இந்த பிரச்சனையை தீர்த்த பின்பு தான் தேதி குறிப்பிட்டு இருக்க வேண்டும். உங்கள் கடமையிலிருந்து தவறி விட்டு பிறர் மேல் பழி போடுவது தவறு.
நடிகர்களை நம்பி போய் வாழ்க்கையை தொலைத்து வருகிறார்கள் சிலர். படம் வெற்றி பெற்றால், புகழ் வந்தால், கைதட்டல் வந்தால், விசில் அடித்தால் எல்லா புகழும் உங்களுக்கு.. பிரச்சனை வந்தால் மட்டும் நீங்கள் காரணம் இல்லையா? பிரச்சனையை சரி செய்ய வேண்டியது யார்? சென்சார் வரவில்லை என்றவுடன் மத்திய அரசு தான் பிரச்சனை என்று கூறுகிறீர்கள்.. முழுக்க, முழுக்க இது விஜயோட தவறுதான்.. நடிகர்கள் பின்னால் போனால் வாழ்வாதாரம், தொழிலில் முன்னேறி இருக்கின்றேன் என்று யாராவது சொல்ல முடியுமா? நடிகர்கள் பின்னால் யாரும் போகாதீர்கள்..
முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, ஆகியோர் சினிமாவில் நடித்துள்ளார்கள். திமுக வேற சினிமா நடிகன் வேற.,
விஜய் பக்குவபட்டவர்களை கூட வைத்திருக்க வேண்டும். சென்ரல் ஜெயிலில் உள்ளவர்களை கூட வைத்தால் எப்படி கட்சி வளரும்.. ஆதவ் அர்ஜுனா என்பவர் யார்? நல்லவர்களை கூட வைக்க வேண்டும்.. பணம் இருக்கிறது என்பதற்காக ஆதவ் அர்ஜுனா-வை கூட வைத்திருக்கலாமா? நிறைய பேர் கொள்ளையடித்து பணத்தை வைத்திருப்பார்கள். அப்போது உங்களுக்கும் அந்த எண்ணம் தானே வரும். நல்லவர்களை, சிந்தனையாளர்களை, தெளிவானவர்களை உடன் வைக்க வேண்டும்.. செய்தியாளரை சந்திக்க தைரியம் இல்லை.. ஜனநாயகன் படத்தை தமிழ் தயாரிப்பாளருக்கு கொடுத்திருக்கலாமே.
கரூரில் மாநாடு போட வேண்டும் என்று கேட்டது யார்? அப்பாவி மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. 41 பேர் இறந்ததற்கு விஜய் தான் பொறுப்பு. ஜெயலலிதா இருந்திருந்தால் தற்போது விஜய்யை கைது செய்து இருப்பார்.. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் கரிசனம் காட்டி இருக்கின்றார். சில்க் சுமிதா, கவுண்டமணி, செந்தில், வடிவேல், த்ரிஷா போன்றவர்கள் கூடினால் கூட்டம் வர தான் செய்யும்.
அதிமுக, பாஜக கரூரில் நடந்த சம்பவத்திற்கு அப்போது விஜய்க்கு ஆதரவாக பேசினார்கள்.. கூட்டணி வரவில்லை என்றவுடன் தற்போது எதிராக பேசி வருகிறார்கள்.. கூட்டணிக்கு வரவில்லை என்ற காரணத்தினால் இது ஒரு சுய நல அரசியல் செய்து வருகிறார்கள்..
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த போது அங்கு சென்ற விஜய் ஏன் மதுரை மாநாட்டில் இறந்தவர் வீட்டிற்கு செல்லவில்லை. பப்ளிசிட்டி வேண்டும் என்றால் எங்குனாலும் விஜய் செல்வார்..