மதுரை அருகே தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனே திறந்திட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் செல்லம்பட்டி முதல் அலங்காநல்லூர் வரையிலும், அதேபோல் மேலூர் வெள்ளலூரில் துவங்கி பாலமேடு வரையிலும் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
செல்லம்பட்டியில் துவங்கி சொக்கத்தேவன் பட்டி, நாட்டப்பட்டி, அய்யனார்குளம், விக்கிரமங்கலம், மன்னாடிமங்கலம், குருவித்துறை, சோழவந்தான், இரும்பாடி, கருப்பட்டி, வாடிப்பட்டி, தனிச்சியம், அய்யயங்கோட்டை, புதுப்பட்டி, அலங்காநல்லூர் பேருந்து நிலையம், அலங்காநல்லூர் கேட்டுகடையில் நிறைவடைந்தது.
இதில் செல்லம்பட்டியில் இருந்து அலங்காநல்லூர் வரை நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் வேல்பாண்டி, விவசாயிகள் சங்க மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் நாகேந்திரன் ஆகியோர் தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இந்த பிரச்சார இயக்கம்
இந்த பிரச்சார இயக்கத்தில் துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் துவக்கி வைத்து பேசினார். இதில் விவசாயிகள் சங்கம் வி.பி.முருகன், முருகேசன், குருசாமி, ரத்தினம், விவேக், சி.பி.எம் மாவட்டக்குழு உறுப்பினர் உமாகேஸ்வரன், வாடிபட்டி ஒன்றிய செயலாளர் செல்வகுமார் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செயலாளர் இளங்கோவன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் தலைவர் பழனிச்சாமி, ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கே.கதிரேசன், ராஜாமணி, அய்யாவு, ராஜேஸ்வரன், அடக்கி வீரணன், சேகர்,ராதாகிருஷ்ணன்,செந்தில்குமரன், சேதுராஜன்,முருகன், மற்றும் மார்க்சிஸ்ட் மேலூர் தாலுகா செயலாளர் தனசேகரன், மாவட்டக் குழு உறுப்பினர் கண்ணன், அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் கே.தவமணி, சி.ஐ.டி.யூ மணவாளன் ஆகியோர்உட்பட பலர் கலந்து கொண்டனர்.