ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன்

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த குப்புகல்மேடு பகுதியை சோந்தவா ராஜேஷ்(40). இவா திருவள்ளூா அருகே உள்ள தனியார் கம்பெனி பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவா கடந்த 29-ஆம் தேதி மினி பஸ்சில் கீழ்வீதி வழியாக நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்துள்ளார்.

அப்போது திரௌபதி அம்மன் கோயில் அருகே வந்து கொண்டிருந்த போது, நெடுஞ்சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூபாய் 15 ஆயிரம் பணத்தை கைப்பற்றி பாணாவரம் போலிசில் ஒப்படைத்துள்ளார். பின்னர் இதுதொடர்பாக போலீசார் விசாரனை செய்த போது பாணாவரம் அடுத்த காட்டுப்பாக்கம் அம்பேத்கா நகர் பகுதியை சோர்ந்த வேலு (52) என்பதும், இவர் நெமிலி பகுதியில் துணிகடை வைத்து வியாபாரம் செய்து

வருவதும் தெரியவந்தது.

மேலும் சம்பவத்தன்று வியாபாரம் முடித்து விட்டு விற்பனையான பணத்தை ரூ.15 ஆயிரத்தை தனது இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்து சென்ற போது கீழே தவறவிட்டது தெரியவந்து. இதனையடுத்து போலீசார் பணத்தை தவறிவிட்ட வேலுவை வரவைத்து

அவரிடம் ரூ.15 ஆயிரத்தை ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து சாலையில் | கிடந்த பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த டிரைவர் ராஜேஷ்சின் நேர்மையை பாராட்டி, சப் | இன்ஸ்பெக்டர் நாகேந்திரன் அவருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *