ஆதரவற்றவர் மரணம்! காவலருடன் இணைந்து நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

திருச்சி உறையூர் குழுமணி ரோடு பகுதியில் சுமார் 43 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த திருச்சி உறையூர் காவல்துறையினர் சம்பவம் இடம் சென்று விசாரிக்கையில் 25 வருடங்களுக்கு மேலாக குடும்பத்தை விட்டு பிரிந்து திருமணம் செய்து கொள்ளாமல் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார்.
மேற்படி நபர் உடல்நலம் குன்றி இறந்துள்ளார்.

மேற்படி உடலை உற்றார் உறவினர் யாரும் உரிமை கோராத சூழலில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது. உடற் கூராய்வு செய்யப்பட்ட உரிமை கோரப்படாத உடலினை நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி உறையூர் காவல் நிலையம் சட்ட ஒழுங்கு பிரிவு முதல் நிலை காவலர் நசூருதீன் ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் முதல் நிலை காவலர் நசூருதீன் முன்னிலையில் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அலுவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *