மன்னார்குடி., ஜூன்.01
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத்தின் தலைவர் கரிகாலன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் ..அப்போது குறுவை சாகுபடி விவசாய பணிகளை தொடங்கி விட்டோம் இந்நிலையில் வரும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்பது கொஞ்சம் கேள்விக்குறியாக இருக்கிறது.
காரணம் நீர்மட்டம் குறைவாக இருக்கிறது மழை பொழிந்து தண்ணீர் வந்தால் ஒழிய திட்டமிட்டபடி நதிநீர் ஆணையத்தின் உடைய தண்ணீர் வருவதாக எங்களுக்கு தெரியவில்லை.
இந்நிலையில் மேட்டூர் அணையின் உடைய தண்ணீர் வரத்து நிரந்தரமாக தடைபடும் விதத்திலே மேகதாது அணையை இப்பொழுது கர்நாடக கட்டி வருகிறது இப்பொழுது சின்ன சின்ன போராட்டங்கள் ஆங்காங்கே விவசாயிகளால் நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
இது தொடருமேயானில் இந்த அணை கட்டுவதில் நிறுத்தப்படுகிற சூழல் ஏற்படாத சூழலில் நிச்சயமாக மிகப்பெரிய போராட்டம் தமிழகத்தில் வெடிக்கும் விவசாயிகள் மட்டும் தமிழகத்தினுடைய பொதுமக்களும் வெகுண்டு எழும் சூழல் உருவாகப் போகிறது இந்த நிலை மாறிட வேண்டும் என்றால் தமிழகத்தினுடைய முதல்வர் விஜய் இப்பொழுது காங்கிரஸ் கட்சியுடன் நல்லிணக்கம் இருக்கிறார்.
அவருடைய கூட்டணி இங்கு அமைந்திருக்கிறது. அவர் முறையாக ராகுல் காந்தியிடம் பேசி நதிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வழியை முதல்வர் விஜய் செய்வார் என்று நம்புகிறோம்.
அது மட்டுமல்ல இது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவித்துவிட்டு மத்திய அரசின் மூலமாக தற்பொழுது தண்ணீர் வராத சூழலை ஏற்படுத்தி மேகதாதுவில் அணையை கட்டி இது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அல்ல வேளாண்மைக்கு ஒவ்வாத மண்டலமாக மாற்றும் சூழ்நிலையை மத்திய அரசு உருவாக்கிக் கொண்டிருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்தார் .