தாராபுரம் காங்கேயம் சாலை இச்சிப்பட்டி கிராமங்களில் அனுமதி இல்லாமல் உயர் மின் கோபுரம் டவர் அமைப்பதை தடுத்த பொதுமக்கள்.

குண்டடம்.

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள இச்சிப்பட்டி என்ற கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் உள்ளது சுற்றுவட்டார பகுதியில் கிராமங்களில் சுமார் ஐயாரத்துக்கு மேற்பட்ட மக்கள் விழாக்களிலும் சுப நிகழ்ச்சிகளும் கூடுவது வழக்கம் காங்கேயம் சாலையில் கோவில் அமைந்துள்ளதால் வெளியூர்களிலிருந்து மற்றும் அனைத்து பகுதிகளிலிருந்தும் பழனி செல்வதற்காக நடைபாதை பக்தர்கள் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து தங்கி செல்வது வழக்கம்.

மேலும் இச்சிப்பட்டி கிராமத்தில் உயர் மின் கோபுரம் அமைத்து பக்தர்களுக்கும் இடைஞ்சலாக இருக்கும் மாதம் ஒருமுறை அமாவாசை பூஜை நடைபெறும் அனைத்து18 பட்டி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்களும் ஒன்று கூடுவோம் இந்த உயர்மின் கோபுரம் அமைப்பதால் திருவிழாக்கள் நடைபெறும் பொழுது வான வேடிக்கை வைத்தால் உயர்மின் கம்பிகளில் பட்டு விபத்துக்கள் நேரிடும் அதற்கு முன் தடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தின் இலக்கிய அணி சார்பாக பலமுறை எடுத்துக்கோரியும் எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் அனுமதி இல்லாமல் டவர் லைன் அமைத்து வருகின்றனர்.

மேலும் இதற்கு உடனே தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மாவட்ட ஆட்சியர் எந்தவித அனுமதி தராத நிலையில் இவர்களாகவே ரோட்டை ஆக்கிரமித்து டவர் லைன் வைத்து வருவது வேதனைக்குரியது தமிழக முதல்வர் அவர்களின் செயலாளர் அவர்களுக்கு அனுப்பி உள்ளோம் தமிழக அரசின் தமிழக முதல்வர் உடனடியாக இதை நிறுத்த வேண்டும் என்று ஊர் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்டுக் கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *