திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளாறு ஜோதி நிதி உதவி பள்ளி குழந்தைகள் தின விழாவில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நிகழ்விற்கு பள்ளி தலைமை ஆசிரியர் பழ.சீனிவாசன் தலைமை தாங்கினார். கவிஞர் பூங்குயில் சிவகுமார் வரவேற்றார்.
நிகழ்வில் அணைக்குடி. சு.சம்பத் எழுதிய ‘தடைகளைத் தாண்டுக தம்பி’ என்ற சிறார் பாடல்கள் நூலினை கவிஞர் ஆரிசன் வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியதாவது : குழந்தைகள் தினத்தில் மட்டுமல்லாமல் தினமும் குழந்தைகளை நாம் கொண்டாட வேண்டும் என்றும், குழந்தைகளின் கல்வி சட்டம் உரிமை ஆகியவற்றை வீட்டிலும், பள்ளிகளிலும் நாம் நிலை நாட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலம் தாய்மொழி வழி கல்வியில் பயில்வதை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், தாய்மொழிக் கல்வியே குழந்தைகளுக்கு சிறந்த அறிவாற்றலை தரும் என்றும்,
அறம் வளர்க்கும் திருக்குறளை பள்ளிகளில் முற்றோதல் செய்ய வேண்டும் என்றும், அணைக்குடி. சு.சம்பத் போன்ற கவிஞர்கள் குழந்தைகளுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றும் பேசினார். முதல் பிரதியை தெள்ளார் ஊராட்சி மன்ற தலைவர் டிகேஜி ஆனந்த் பெற்றுக்கொண்டார். புலவர் ந.பானு, வந்தவாசி நகர மன்ற துணைத் தலைவர் அன்னை க.சீனிவாசன், அரிமா பெ.எட்டியப்பன் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா.சீனிவாசன்ரோட்டரி.விநாயகமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அணைக்குடி சு.சம்பத் தனது ஏற்புரையில் மயிலை சிவமுத்து போன்ற முன்னோடி கவிஞர்களே என் எழுத்துக்கு வித்து என்று பேசினார். இறுதியில் பள்ளி ஆசிரியை தமிழ் முல்லை நன்றி கூறினார். நிகழ்வில் தெள்ளாறு ரோட்டரி கிளப் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பாக்கியலட்சுமி, வளர்மதி, கோபாலகிருஷ்ணன் மற்றும் ரோட்டரி கிளப் பொறுப்பாளர்கள், ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர்கள் ரவி, அஸ்கர் அலி ஆகியோர் பங்கேற்றனர் .நிகழ்வை வந்தவாசி பூங்குயில் பதிப்பகமும், தெள்ளாறு ஜோதி நிதி உதவி பள்ளியும் இணைந்து நடத்தியது.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி