மதுரை

நவீன இந்தியாவின் எதிர்காலம் குறித்து கனவு கண்ட பகத்சிங் தியாகியான மார்ச் 23 ல் துவங்கி, அகில இந்திய மாணவர் கழகத்தினை நிறுவிய மாணவர் தலைவர் சந்திரசேகர் படுகொலை செய்யப் பட்ட இன்று மார்ச் 31ம் தேதி வரை நடைபெற்ற மாநிலம் தழுவிய பிரச்சார இயக்கத்தின் நிறைவு நிகழ்ச்சியாக தமிழக மாணவர் இளைஞர் களின் கோரிக்கை மாநாடு நடைபெற்றது.
புரட்சிகர இளைஞர் கழகம், மாநில பொதுச்செயலாளர் தனவேல் தலைமை தாங்கினார். அகில இந்திய மாணவர் கழக மாநில தலைவர்
பாலஅமுதன்சிறப்புரையாற்றினார்.

சென்னை பல்கலைக்கழக மேனாள் ஆட்சி குழு உறுப்பினர் பேரா.சிவக்குமார் தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம் பேரா.முரளி, அகில இந்திய மாணவர் கழகம் லேகா, புரட்சிகர இளைஞர் கழகம் மாநில தலைவர் மா.சுந்தர்ராஜன்
மதுரை மாவட்டச் செயலாளர் மதிவாணன், மாநில செயலாளர்பழ. ஆசைத்தம்பி , அரசியல் தலைமை குழு உறுப்பினர் வீ.சங்கர், உள்ளிட்ட வர்கள் உரை யாற்றினர்.

மாநாட்டில் பின்வரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்
பட்டன. பிற்போக்கு இந்துத்துவ கருத்துகளின் அடிப்படையிலான, அறிவியல் அடிப்படையற்ற, மத்திய அரசின் கல்விக்கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி, தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க அரசு தீர்மானம் இயற்ற வேண்டும்.
வெள்ளையர்கள் காலத்து மெக்காலே கல்விமுறை போல, இந்த நவீன காலத்துக்கான கல்விக் கொள்கையாக மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை அமைந்துள்ளது.

காலியாக உள்ள கல்லூரி- பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து அரசுப் பணிகளையும் உடனடியாக நிரப்பி வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும். ஒப்பந்த முறை வேலை வாய்ப்பை சட்ட விரோதம் என்று அரசுகள் அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *