செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு வருகை தர இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேலுக்கு அதிமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் முதல்வர் பிறந்த நாள் விழாவை ரத்து செய்து மரகதம் குமரவேல் தப்பி ஓட்டம் பிடித்தார்.
மதுராந்தகம் சட்டமன்ற தனி தொகுதியின் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் தவெக கட்சிக்கு ஆதரவு தெரிவித்து இருந்தார் மேலும் அக்கட்சியிலிருந்து நான்கு பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக வில் இணைந்தனர்.
இதில் இவரும் ஒருவர் ஆகவே இவர் மதுராந்தகம் அருகே உள்ள முதுகரை கிராமத்தில் நடைபெற இருந்த தமிழக வெற்றி கழகம் சார்பில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற இருந்தது அதற்காக வருகை தர இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், மதுராந்தகம் தெற்கு அதிமுக ஒன்றிய கழக செயலாளர் கார்த்திகேயன், மதுராந்தகம் அதிமுக ஒன்றிய குழு பெருந்தலைவர் கீதா கார்த்திகேயன், தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி ஏண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக சார்பில் வெற்றி பெற்று கூட்டணி கட்சியையும் மறந்து தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்ற மரகதம் குமரவேல் எந்த காரணத்தை கொண்டும் இப்பகுதிக்கு வரக்கூடாது எனவும் கிராமத்தில் இதுவரை கட்சி சார்பில் எந்த பிரச்சினையும் ஏற்பட்டது இல்லை இப்பகுதியில் உள்ள இளைஞர்களை கொண்டு அதிமுக பேனர் மற்றும் போஸ்டர் கிழிப்பது போன்ற கீழ்த்தரமான வேலைகளை செய்து வருகிறார். ஆகவே இவர் மீது துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.