கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வரும் பணியாளர்களின் குடியிருப்புக்களை சீர்செய்ய கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் அதற்கான நடவடிக்கை மேற்க் கொள்ளப்பட்டது அதனடிப்படையில் நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறமுள்ள துப்புரவு பணியாளர்களின் குடியிருப்புக்களில் பணி நடைபெற்று வந்தது இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்ப்பட்டு இதுநாள் வரையிலும் கிடப்பில் போடப்பட்டுள்ள அப்பணி தொடராமல் இருந்து வருவதால் சம்பந்தப்பட்ட குடியிருப்புவாசிகள் பெரும் சிரமத்துடன் வேதனையடைந்து வருவதாகவும் மழைக்காலம் துவங்க உள்ள நிலையில் சிதிலமடைந்துள்ள குடியிருப்பு மேற்க் கூரை வழியாக மழைநீர் அதிக அளவில் புக வாய்ப்பு உள்ளதாகவும் தற்போது பெய்து வரும் மழையிலும் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் பணியாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் எனவே சம்பந்தப்பட்ட நகர்மன்ற தலைவர் பணியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு சிதிலமடைந்த மேற்கூரையை சீரமைக்கவும் கிடப்பில் போடப்பட்டுள்ள பணியை தொடரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *