நாமக்கல்லில் அமையவிருக்கும் புதிய நவீன ஆவின் பால் பண்ணைக்கு மத்திய அரசு ரூ 6 கோடி 80 லட்சம் ரூ முழுவதும் மானியமாக வழங்கி உள்ளது மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கே . ஆர் .என் .ராஜேஷ்குமார் எம்.பி .பேட்டி

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் இந்திய பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கே .ஆர்.என் .ராஜேஷ்குமார் இன்று நாமக்கலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்பொழுது அவர் திமுக தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளை பலவற்றை நிறைவேற்றி வருவதாகவும் நாமக்கல் மாவட்டத்தில் திமுக சார்பாக அளித்த வாக்குறுதி கள் பலவற்றை நிறைவேற்றி வருவதாகவும் குறிப்பாக நாமக்கல் மாவட்ட மக்களுக்கு அழைக்கப்பட்ட வாக்குறுதிகளில் முக்கியமான ஒன்றான நாமக்கலில் மிக நவீனமான ஆவின் பால்பண்ணை ஒன்று அமைக்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதியின் படி தற்பொழுது அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு தமிழக அரசு தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் ரூ 70 கோடி மதிப்பில் அனுமதிக்கப்பட்டு அதற்கு ரூ 50 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்து மத்திய அரசு அனுமதிக்கும் நிதி ஒதுக்கீட்டுக்காகவும், காத்திருந்த நிலையில் தற்போது மத்திய அரசனது ரூ 6 கோடியே 89 லட்சத்தை முழு மானியமாக நாமக்கல் நவீன பால்பண்ணைக்கு விடுவித்து அறிவித்துள்ளதாகவும் இதற்காக மத்திய அரசுக்கு நாமக்கல் மாவட்ட மக்கள் சார்பாக நன்றியை தெரிவிப்பதாகவும் .
இந்த புதிய நவீன பால்பண்ணையில் தினந்தோறும் 1 லட்சம் லிட்டர் பால் குளிரூட்டப்படும் என்றும் இதில் பல வகையான பல்பொருள்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும்

11 ஏக்கர் நிலத்தில் இயங்கும் இந்த நவீன நாமக்கல் ஆவின் பால் பண்ணைக்கு 10,000 பால் உற்பத்தியாளர்கள் தினந்தோறும் பால் வழங்குவார்கள் என்றும் தெரிவித்த கே. ஆர் .என்.ராஜேஷ்குமார் எம்பி

அதே நேரத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினனுக்கும் தமிழக அரசுக்கும் நாமக்கல் மாவட்ட மக்கள் சார்பாகவும், தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதற்காகவும் நன்றியை தெரிவிப்பதாகவும் இன்று செய்தியாளர்களிடம் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே ஆர் என் ராஜேஷ்குமார் தெரிவித்தார்

மேலும் நாமக்கல் நகராட்சி சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் நாமக்கல் பேருந்து நிலையம் பணிகள் விரைந்து முடியும் என்றும் புதிய பேருந்து நிலையத்திற்கு நாமக்கல் சேலம் பைபாஸ் சாலையில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய பாதை அமைக்கும் படிணியும் துவங்கியுள்ளது என்றும்

நாமக்கல் மோகனூர் அருகில் சிப்காட் அமைப்பதற்காக 500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் அரசு புறம்போக்கு நிலம் என்றும் மீதமுள்ள இடங்கள் பட்டா இடங்களாக இருக்கிறது என்றும் விவசாய பட்டா நிலங்களுக்கு உரிய இழப்பீடு தொகை கொடுக்கப்பட்டு அவைகள் கையப்படுத்தப்படும் கட்டப்படும் கையகப்படுத்தப்படும் என்றும் இதில் யாருக்கும் எந்த பிரச்சனையும் பாதிப்பும் இல்லாமல் சுமூகமாக சிப்காட் அமைக்கும் பணி நடந்த என்றும் அப்போது கே ஆர் என் ராஜேஷ்குமார் எம்பி தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *