தூத்துக்குடி தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சிறப்பு தீவிர திருத்தம்-2026 நடைபெற்று வருகின்றது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள ஓட்டப்பிடாரம் ஊராட்சி மேலமடம் பள்ளியில் பூத் எண் 42 ல் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் பூர்த்தி செய்து மீளப்பெறும் பணிகள் 04.12.2025 வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இப்பணியில் சட்டமன்ற தொகுதிகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் மேற்பார்வையாளர்கள், தேர்தல் பிரிவு பணியாளர்கள் அனைவரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சிறப்பு தீவிர திருத்தம் வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வழங்குவதனை எளிமைபடுத்தும் வகையிலும் சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமை ஆகிய இரண்டு தினங்கள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

அதன்படி ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 15 ஊராட்சிப் பகுதிகள் உள்ளடங்கிய 38 பூத்களில் மேலமடம் பகுதியில் நடைபெற்ற சிறப்பு திருத்த முகாமில் வடக்கு ஒன்றிய திமுக செயலாளரும் முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான இளையராஜா பொதுமக்கள் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கும் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவிக்கையில் முகாமில் அந்தந்த வாக்குச்சாவடிகளிலேயே வாக்காளர்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கணக்கெடுப்பு படிவங்கள் பூர்த்தி செய்வதில் ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் ஐயப்பாடுகளை களைந்திடவும், அதனை நிவர்த்தி செய்வதற்கு சம்மந்தப்பட்ட வாக்குச் சாவடி மையங்களில் தேர்தல் பணி அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். எனவே, மேற்கண்ட சிறப்பு முகாமினை வாக்காளர்கள் நன்கு பயன்படுத்தி தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிடுமாறும் கிராமமக்களுக்கு எந்த ஒரு சந்தேகங்கள் இருந்தாலும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள் எந்தெந்த அதிகாரிகள் இப்பணிகளில் ஈடுபட்டுகிறார்கள் என்பது குறித்து தகவல்களை தெரிவிக்கிறேன் என்றாா்.

நிகழ்ச்சியின் போது ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியன், வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் வேல்ராஜ், மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் டிடிசி ராஜேந்திரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர். இதனால் ஓட்டப்பிடாரம் தொகுதி மக்கள் மற்றும் பாமர மக்கள் ஒன்றிய செயலாளர் இளையராஜாவுக்கு அவருடன் இணைந்து பணியாற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *