செய்தியாளர் வெற்றிசெல்வம்
புதுச்சேரி உழவர்கரை தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்பாளையம் பகுதியில் JCM மக்கள் மன்றத்தை சமூக சேவகர் சார்லஸ் மார்டின் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்,
நிகழ்ச்சியில் உழவர்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலை மற்றும் இனிப்புகளை சமூக சேவகர் சார்லஸ் மார்டின் வழங்கினார்.
முன்னதாக இந்திரா காந்தி சதுக்கத்தில் இருந்து ரெட்டியார்பாளையம் JCM மக்கள் மன்றம் அலுவலகம் வரை ரோட் ஷோ மேற்கொண்ட சமூக சேவகர் சார்லஸ் மார்டினுக்கு வழி நெடுக்கிலும் ஏராளமான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.