ஜே சிவகுமார் திருவாரூர் செய்தியாளர்

திருவாரூர் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ பார்வையிட்டார்

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
திருவாரூர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றைய தினம்6.04.2023 தொடங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது இன்றைய தினம் நடைபெறும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 7653 மாணவர்கள், 7658 மாணவிகள் என மொத்தம் 15,311 மாணவிகள்69 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர் 363 மாணவர்களும்197 மாணவிகளும் என மொத்தம் 560 மாணவ, மாணவிகள் தேர்வில் பங்கேற்கவில்லை மேலும் 191 ஆண்கள்51 பெண்கள் என 242 தனித்தேர்வர்கள் 3 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

23 ஆண்கள், 8 பெண்கள் என 31 தனி தேர்வர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை தேர்வு எழுதுகின்ற மாற்றுத்திறனாளி மாணவியர்களுக்கான உதவியாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் இத்தேர்வுப்பணிக்கு 1,100 ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப்பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் காவல்துறையுடன் இணைந்து 86 நிலையான படை அமைக்கப்பட்டு தேர்வுகளில் எவ்வித முறைகேடும் நடைபெறாமல் கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்
இந்நிகழ்வில் வட்டாட்சியர் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *