பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், மக்கள் தொடர்பு திட்ட முகாம்கள் மற்றும் கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஒரு மாதத்திற்கு மேலாக நடவடிக்கை எடுக்கப்படாத மனுக்களின் விவரங்களையும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
குறிப்பாக “உங்களுடன் ஸ்டாலின்“ முகாம்களில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விரிவாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகுதியுடைய அனைவருக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கப்பெறுவதை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்றவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், கலைஞர் மகளிர் உரிமை தொகைத் திட்டம், கலைஞர் கனவு இல்லம் திட்டம், அடிப்படை வசதிகள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 336 மனுக்களை பொதுமக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளிட்ட அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர்.
இன்றைய கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.6,690 மதிப்பில் தையல் இயந்திரங்களையும், 2 பயனாளிகளுக்கு வன்கொடுமைத் திட்டத்தின் கீழ் கருணை அடிப்படையில் பதிவறை எழுத்தர் மற்றும் சமையலருக்கான அரசுப் பணிக்கான நியமனஆணைகளையும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், 3 பயனாளிகளுக்கு தலா ரூ.55 ஆயிரம் மதிப்பில் இயற்கை மரண உதவித் தொகைக்கான ஆணைகளையும், 2 பயனாளிகளுக்கு தலா ரூ.20 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித் தொகைக்கான ஆணைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். மேலும், “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் வழங்கப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு, 16 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அடை்டைகளையும், கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளித்த 40 பயனாளிகளுக்கு 50 சதவீதஅரசு மானியத்துடன் தலா ரூ.25935 மதிப்பில் புல் நறுக்கும் கருவிகளையும் என 68 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 75 ஆயிரத்து 850 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர்
பிரபாகரன் முன்னிலையில் வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், கால்நடை பராமரிப்புதுறை இணை இயக்குநர்பகவத் சிங், மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் சிவக்கொழுந்து, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் வாசுதேவன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் மூர்த்தி, மாவட்ட மேலாளர் தாட்கோ கவியரசு மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.