தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சியில் மக்கள் சந்திப்பு கூட்டம்.
திருப்பூர் தென் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் P. சத்தியபாமா, Ex.MLA அவர்கள் தலைமையில் இன்று குண்டடம் ஒன்றியம் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வு சங்கபாளையம், பொடரம்பாளையம், சேடபாளையம் ஆகிய மூன்று இடங்களில் நடைபெற்றது. பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும், வடுகநாத சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபட்டார்.
இந்நிகழ்ச்சியில் குண்டடம் தெற்கு ஒன்றிய செயலாளர் முத்து வடுகநாதன். ருத்ரவதி பேரூராட்சி கழகச் செயலாளர் தாமரைச்செல்வன், குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், வர்த்தக அணி அமைப்பாளர்கள் குமார், நந்தகுமார், இளைஞர் அணி அமைப்பாளர் செல்வபிரகாஷ் வர்த்தக அணி வர்த்தக அணி பாலசுப்பிரமணியம் மற்றும் தமிழக வெற்றி கழக அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.