நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நெய்குப்பை ஊராட்சி வேலங்குடி கிராமத்தில் சீதாளதேவி புத்தடி பாடைகட்டி மாரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா காப்பு கட்டுதலும் தொடங்கி 30-ம் தேதி பால்குடம், அழகு காவடி, பாடை காவடி தொடர்ந்து மகா யாகமும், தீபராதனை, அன்னதானம், கஞ்சிவார்த்தல் நடைபெற்றது. நேற்று முக்கிய நிகழ்வான சந்தன காப்பு அலங்காரமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திறுநீர், தேன், திரவியம், மாப்பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகமும் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *