பத்திரிக்கை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பத்திரிக்கை சுதந்திரம் என்பது சாதாரமானது இல்லை. அதை பெறுவதற்கு எல்லையில்லா துண்பத்தையும் சோதனையும் கடந்து வரவேண்டும். உலக அளவில் 1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் மே 3 ஆம் தேதி பத்திரிக்கை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மனித உரிமைகள் சாசனம் பகுதி 19-ல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

அடிப்படை உரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய வகையில் பத்திரிக்கை சுதந்திரம் இருக்க வேண்டும் என யுனெஸ்கோ கூறுகிறது. 1978 ஆம் ஆண்டு ஜெனிவா உடன்பாடு பத்திரிக்கை சுதந்திரம் எப்படி இருக்கவேண்டும் என்பதை வரையறை செய்கிறது. மேலும் பத்திரிக்கையையும், பத்திரிக்கை சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும் கூறுகிறது. இதில் இன்று வெளியிடப்பட்ட உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் 180 நாடுகளில் இந்தியா 161 வது இடத்தில் உள்ளது என்பது மிகுந்த கவலை அளிக்ககூடியதாக உள்ளது.
நிருபர்களுக்கு எல்லை இல்லை (ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்) தனது உலக பத்திரிக்கை சுதந்திர குறியீட்டின் 21வது பதிப்பை இன்று வெளியிட்டுள்ளது. பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்ட 180 நாடுகளில் இந்தியா 161 வது இடத்திற்கு சரிந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு 150 வது இடத்தில் இருந்த 11 வது தரவரிசைக்கு மோசமாக சரிந்து உள்ளது. தெற்காசியாவிலும் கூட,தரவரிசைபட்டியலில் மிக மோசமான சரிவை இந்தியா கண்டுள்ளது. வங்காள தேசம் சற்று மோசமாக இருந்தாலும், 163 வது இடத்தில் உள்ளது, பாகிஸ்தான் இந்தியாவை விட 150 வது இடத்தில் உள்ளது. தலிபான் அரசாங்கம் சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு நண்பன் இல்லை என்று அறியப்படும் ஆப்கானிஸ்தானும் கூட 152 வது இடத்தில் உள்ளது. பூட்டான் 90 வது இடத்திலும், இலங்கை 135 வது இடத்திலும் உள்ளன. பத்திரிகையாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று நம்பும் 31 நாடுகளில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது வேதனையான ஒன்றாகும். இந்தியா ஏன் உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் மிகவும் பின்தங்கியுள்ளது என்பது குறித்து ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் கூறியதாவது:- “பத்திரிகையாளர்களுக்கு எதிரான வன்முறை, அரசியல் சார்புடைய ஊடகங்கள் மற்றும் ஊடக உரிமையின் குவிப்பு இவை அனைத்தும் “உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தில்” பத்திரிகை சுதந்திரம் நெருக்கடியில் உள்ளது என்பதை காட்டுகிறது என கூறி உள்ளது.
இன்று உலகில் உள்ள பல நாடுகளை ஒப்பிட்டு நோக்கும்போது இந்தியப் பத்திரிகைகள் தேவையான சுதந்திரத்தோடு செயல்படுவது போல தோன்றினாலும் உண்மை வேறுவிதமாகத்தான் உள்ளது. இப்போதும் பத்திரிக்கைச் சுதந்திரத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ வரைமுறைப்படுத்தும் மத்திய அரசின் பத்திரிக்கைச் சட்டம் எதுவும் இல்லை என்றாலும் சில சமயங்களில் தேவையில்லாமல் ஆள்வோர்கள் தங்கள் வசதிக்காக பத்திரிக்கைகள் மீது வழக்கு போடுவதும் தாக்கப்படுவதும் நடந்துதான் வருகின்றன என்பதை குறிப்பிட்டுதான் ஆக வேண்டும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *