திருச்சி: லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்கத்திற்கு சர்வதேச லயன்ஸ் கிளப் சங்கத்தின் சாசனச் சான்றிதழ் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.
விழாவிற்கு லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்கத்தின் சாசனத் தலைவர் ஹேமலதா தலைமை வகித்தார். சாசனச் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சாசனப் பொருளாளர் முகமது ஹயாஸ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.


லயன்ஸ் சங்கங்கள் மாவட்டம் 3242F, மண்டலம்–1 தலைவர் முகமது சபி, வட்டாரம் 1A தலைவர் சரவணன், திருச்சிராப்பள்ளி ஹோஸ்ட் லயன்ஸ் சங்க பிரபுகுமார் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர்.

சர்வதேச லயன்ஸ் கிளப் சங்கத்தின் சாசனச் சான்றிதழ் என்பது ஒரு புதிய லயன்ஸ் சங்கம் முறையாக உருவாக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அங்கீகார ஆவணமாகும். இது சங்கத்தின் பிறப்புச் சான்றாகவும், தொடக்க நாள், சங்கத்தின் பெயர், நிறுவனர் உறுப்பினர்கள் மற்றும் அதன் அமைப்பு குறித்த வரலாற்றுப் பதிவாகவும் விளங்குகிறது. மேலும், சங்கத்தை உருவாக்கிய நிறுவனர் உறுப்பினர்களின் சேவை மனப்பான்மையையும், லயன்ஸ் இயக்கத்தின் “We Serve” என்ற சேவை நோக்கத்தையும் எடுத்துக்காட்டுகிறது.


சர்வதேச லயன்ஸ் கிளப் சங்கம் வழங்கிய சாசனச் சான்றிதழில், சாசனத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சாசன உறுப்பினர்கள் மற்றும் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை அங்கீகரித்து, திருச்சிராப்பள்ளி விஷன் லயன்ஸ் கிளப்பை முழுமையான உள்ளூர் லயன்ஸ் கிளப்பாக நிறுவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கத்தின் ஆதரவுடன் வழிகாட்டுதலுடன் துவங்கப்பட்ட சங்கம், சர்வதேச லயன்ஸ் கிளப் சங்கத்தின் அரசியலமைப்பு, துணை விதிகள், விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டு சங்கம் செயல்பட வேண்டும் என்றும் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உரிமைகள், சலுகைகள் மற்றும் பொறுப்புகளுடன் அங்கீகரிக்கப்பட்ட உள்ளூர் கிளப்பாக சாசனம் வழங்கப்பட்டுள்ளது.சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியிலிருந்து அது முழுமையாகச் செல்லுபடியாகும் என்றும், சர்வதேச சங்கத்தின் அரசியலமைப்பு, துணை விதிகள், விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை உறுப்பினர்கள் மதித்து செயல்படும் வரையில் சாசனம் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விதிகள் மற்றும் கொள்கைகளுக்கு முரணாகச் செயல்படும் பட்சத்தில், நடைமுறையில் உள்ள விதிகளின்படி சாசனம் ரத்து செய்யப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக, சர்வதேச லயன்ஸ் கிளப் சங்கத்தின் சார்பில் 2026 ஆகஸ்ட் 14 அன்று சர்வதேசத் தலைவர் மார்க் எஸ். லயன் மற்றும் செயலாளர் டேவிட் கிங்ஸ்பரி ஆகியோரின் கையொப்பங்களுடன், அதிகாரப்பூர்வ முத்திரை பதிக்கப்பட்ட சாசனச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.அந்த சாசனச் சான்றிதழை சிறப்பு விருந்தினர்கள்,

லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சங்கத்தின் சாசனத் தலைவர் ஹேமலதா, சாசனச் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், சாசனப் பொருளாளர் முகமது ஹயாஸ் உள்ளிட்டோரிடம் வழங்கினர்.துணைத் தலைவர் கணேசன், சுதாகர், மகேஸ்வரி, கந்தசாமி, விக்னேஷ், திரவிய கிளாடினா, ராகவேந்திரன் ஆனந்த கிருஷ்ணன்,ஹரிபிரசாத் உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *