மதுரையில் கோடை கத்தரி வெயிலால் தினமும் 10 டன் காய்கறி, பழங்கள் வீணாகிறது.

விரைவாக அழுகிப் போகும் அவல நிலை……

கொளுத்தும் கோடை வெயிலால் மனி தர்கள் மட்டுமின்றி காய் கறி, பழங்களும் பாதிப்பை சந்தித்துள்ளன. நாளொன்றுக்கு 10 டன் வரை காய்கறி, பழங்கள் வீணாகின்றன.

தென் மாவட்டங்களின் சந்தையில், மிக முக்கிய காய்கறி, பழ சந்தைகளின் மையமாக அமைந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட், பரவை மார்க்கெட். மதுரை மாட்டுத்தாவணி பழ மார்க்கெட் ஆகியவை தென் மாவட்டம் மட்டுமின்றி கேரளாவின் மிக முக்கிய பகுதிகளின் தேவைகளையும் தீர்த்து வருகிறது.

மாட்டுத்தாவணி, பரவை மார்க்கெட்டிற்கு தினசரி 80 முதல் 90 டன் வரை காய்கறி, பழங்கள் வந்து விற்பனையாகின்றன. இதில், மழை மற்றும் குளிர்காலத்தில் சராசரியாக ஒன்று முதல் 5 டன் வரை அழுகல் உள்ளிட்ட காரணங்களால்
வீணாகும் நிலை உள்ளது.

தற்போது கொளுத்தும் கோடை கத்தரி வெயிலாலும் வெப்பத்தின் தாக்கத் தாலும், போதிய குளிர்பதன வசதி இல்லாததாலும், சராசரியாக 5 முதல் 10டன் வரை காய்கறி, பழங்கள் அழுகி வீணாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சீசன் காலம் தவிர்த்து மற்ற நேரங்களில் நமது பெரும்பகுதி தேவையை ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரும் காய்கறிகளே பூர்த்தி செய்கின்றன.

அதிகாலை 3 மணிக்குள் வரும் காய்கறிகளைத்தான் அன்றைய தினம் விற்பனைக்கு எடுத்துக் கொள்ள முடியும். இதன் பிறகு தாமதமாக வரும் காய்கறிகள் மறுநாள் தான் பயன்படும். ஏற்கனவே லாரியில் வரும் போது வெப்பத்தின் தாக்கத்தால் காய்கறி, பழங்கள் பாதிக்கும் நிலை ஏற்படுகிறது. கிட்டத்தட்ட பாதி காய்கறி வீணாகிறது.

காய்கறிகள் பாரம்ப முறையில் பெரிய அளவிலான குளிர்பதன கிடங்கு களில் பாதுகாக்கும் வசதியை சிறு விற்பனையாளர்
களால் செய்ய முடிய வில்லை. மாற்றாக தனியார் குளிர்பதன கிடங்குகளுக்கு செல்ல வேண்டுமென்றால் அதிகம் செலவிட வேண்டும்.
தனியார் கிடங்கில் ஒரு டன் சேமிக்க மாதம் ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சில்லரை விற்பனை யாளர்களுக்கு ஒரு பெட்டிக்கு ரூ.30 முதல் ரூ.50 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே நேரம் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் டன் வரையுள்ள குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைக்க ரூ 3 கோடி வரை செலவாகும்.
போதுமான அளவுக்கு குளிர்பதன கிடங்கு வசதியை ஏற்படுத்தும் போது விவசாயி களுக்கு நல்ல விலை கிடைக்கும். கழிவுகளின்றி வியாபாரிகள் விற்பனை செய்ய முடியும் குறிப்பாக சேமித்து வைத்து ஏற்றுமதி செய்வது வரை சாத்தியமாகும். எனவே, அனைத்து வகையான காய்கறி பழங்களை யும் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் குளிர்பதன கிடங்கு வசதி இருந்தால் கோடை வெயில் பாதிப்பு மட்டுமின்றி, அனைத்து நேரங்களிலும் முறையாக சேமிக்க முடியும்”.
பெரும்பாலான தனியார் குளிர்பதன கிடங்குகள் பழங்களை சேமிக்கும் வகையிலேயே உள்ளன. இதோடு காய்கறிகளை சேர்த்து வைக்கும் போது அவை கெட்டுப் போக வாய்ப்புள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *