முதுகுளத்தூர் செய்தியாளர்
ஆர்.செந்தில்குமார்

முதுகுளத்தூர் செப் 19,
தமிழக வெற்றிக் கழக ராமநாதபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளர் மதன் தலைமையில் முதுகுளத்தூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.


இதில், முதுகுளத்தூர் அதிமுக மத்திய ஒன்றிய செயலாளரும், வெங்கலக்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான SD செந்தில்குமார்
அவர்கள், மாவட்ட செயலாளர் மதன் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
மேலும், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் ஆப்பனூர் VRS. முத்துராமலிங்கம் மேலும் அதிமுக ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர்.


புதிதாக கழகத்தில் இணைந்த அனைவரையும் மாவட்ட செயலாளர் மதன் வரவேற்று, கழகத்தின் வளர்ச்சிப் பணிகளில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார்.
ராமநாதபுரம் மேற்கு மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைப்புப் பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னணி பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர் மதனின் தொடர் களப்பணிகள் மற்றும் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு, மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் தொடர்ந்து இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *