அலங்காநல்லூர்

மதுரையை அடுத்த அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாவில் சித்திரைப் பெருந்திருவிழா தனிச்சிறப்புடையது. இந்ததிருவிழா கடந்த 1ந் தேதி இக்கோவிலில் தொடங்கியது.

2 ந் தேதியும் திருவிழா கோவில் வெளி பிரகாரத்திலேயே நடந்தது.தொடர்ந்து 3ந் தேதி மாலையில் கள்ளழகர் பெருமாள் -தங்கப் பல்லக்கில் மதுரையை நோக்கி புறப்பட்டார். 4ந் தேதி காலை யில் மூன்று மாவடி பகுதியில் எதிர் சேவை நடைபெற்றது. தொடர்ந்து அன்று இரவு தல்லாகுளம் திருவிழாநடந்தது.பின்னர்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 5ந் தேதி அதிகாலையில் வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் இறங்கிகள்ளழகர் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

6ந் தேதி காலை யில் சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்திற்கு அழகர் எழுந்தருளினார்.. அன்றுமாலையில் கருட வாகனத்தில் பிரசன்னமாகி மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருளினார்.

இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார காட்சிகள் விடிய விடிய நடைபெற்றது. 7 ந் தேதி இரவு பூப்பல்லக்கு திருவிழா நடந்தது. .8ந் தேதி கள்ளர் திருக்கோலத்துடன், மதுரையிலிருந்து இன்று கள்ளழகர் திருமலைக்கு வந்த வழியாக திரும்புகிறார். அன்றிரவு அப்பன் திருப்பதி ஜமின்தார் மண்டபத்தில் சுவாமி காட்சி தந்தருள்கிறார். 9 ந் தேதி நாளை காலையில் கள்ளந்தரி வழியாக அழகர்கோவிலுக்கு அழகர் மலையான் செல்கிறார்.

அங்கு காலை 10- 32 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் சுவாமி இருப்பிடம் போய் சேருகின்றார். 10 ந் தேதி காலையில் உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

இதையொட்டி சுவாமி மதுரைக்கு சென்று திரும்பும் வரை பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வசதியாக தள்ளுவண்டி, மாட்டு வண்டி, உண்டியல்கள் உள்பட மொத்தம் 39 உண்டியல்கள் வரை சென்று திரும்புகிறது. சுமார் 480 மண்டபங்களில் அழகர் எழுந்தருளினார்.
திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் இராமசாமி, மற்றும் கண்காணிப்பாளர்கள், உதவி பொறியாளர்கள், உள்துறை பேஷ்கார்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *