தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு பஞ்சாயத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கருப்பு பேட்ச் அணிந்து கப்பல் கட்டும் தளத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் இயற்ற கோரி வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு கோவளம் புல்லாவெலி உள்ளிட்ட பகுதிகளில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக தமிழக அரசு நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு தொழில் செய்து வரும் சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் உப்பள தொழிலாளர்கள் மற்றும் மீனவர்கள் வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் தொடர் போராட்டங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் தங்கள் பகுதியில் உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் கொண்டுவரக் கூடாது என அவர்கள் போராடி வருகின்றனர்

இந்த நிலையில் தமிழக அரசு கப்பல் கட்டும் தளத்திற்காக கொரிய நாட்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து முதற்கட்டமாக சுமார் 1700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது

இதைத் தொடர்ந்து இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முள்ளக்காடு பஞ்சாயத்து அலுவலகத்தில் வைத்து கிராமசபை கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டத்தில் முள்ளக்காடு பஞ்சாயத்துக்குட்பட்ட முள்ளக்காடு பொட்டல் காடு கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் உட்பள தொழிலாளர்கள் உப்பு உற்பத்தியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கிராம சபை கூட்டத்தில் கப்பல் கட்டும் தளத்தை இந்த பகுதியில் அமைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் மேலும் நிலம் கையகப்படுத்தக்கூடாது என தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர்

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் பொதுமக்களின் உப்பள உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி அளியுங்கள் அதை மாவட்ட நிர்வாகத்திற்கு கொண்டு செல்கிறோம் என தெரிவித்தனர் மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களின் உப்பு உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசுக்கு எடுத்துச் செல்வார் எனவும் தெரிவித்தனர்

ஆனால் முன்னதாக கிராம சபை கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மேலும் இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் உப்பு உற்பத்தியாளர்கள் உப்பள தொழிலாளர்கள் கருப்பு பேட்ஜை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *