லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை, கதிர் ஒளி அறக்கட்டளை,ஸ்ரீ சக்ரா இயற்கை மருத்துவம் யோகா அக்குபஞ்சர் மருத்துவமனை சார்பில் காந்தி ஜெயந்தி விழா கடைப்பிடிக்கப்பட்டது.‌

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பாரதிதாசன் சாலையில் அமைந்துள்ள பரங்கிரி வேலுப்பிள்ளை பூங்கா முகப்பில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, மகாத்மா காந்தியின் கொள்கைகளான உண்மை, அமைதி மற்றும் அகிம்சை ஆகியவற்றை என் வாழ்வில் கடைபிடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன். எந்தவொரு சூழ்நிலையிலும் வன்முறையை நாடாமல், சகிப்புத்தன்மையுடனும் பேச்சுவார்த்தை மூலமாகவும் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பேன் என உளமாற உறுதி ஏற்றனர்.


லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசனத் தலைவர் ஹேமலதா சாசன செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், இயற்கை மருத்துவர் கௌதம் சுதாகர் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *