தினேஷ்குமார் செய்தியாளர் திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திறன் பட செயல்பட்ட 1.கந்திலி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் மோகன் நீண்ட நாட்களாக கோப்பிற்கு எடுக்காமல் நிலுவையில் இருந்த வழக்குகளில் குற்ற வழக்குகளை எதிரிக்கு பிடி கட்டளைகள் நிறைவேற்றி உறுதுணையாக இருந்தமைக்காகவும், 2.பெண் தலைமை காவலர் சித்ரா திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் CCTNS-ல் இந்த வருடத்தில் மட்டும் 251 வழக்குகளை இறுதி அறிக்கை தாக்கல் செய்துள்ளமைக்காகவும் 3.குருசிலாப்பட்டு காவல் நிலைய எழுத்தாளர் ஜெயப்பிரகாஷ் காவல் நிலையத்தில் சிறப்பான முறையில் பதிவேடுகளை பராமரிப்பு செய்ததற்காகவும் 4.திம்மாம்பேட்டை காவல் நிலைய பெண் தலைமை காவலர் சுமதி வாணியம்பாடி நகர காவல் நிலையத்தில் உள்ள வழக்குகளை லோக் அதாலத் போது அதிகப்படியாக விரைந்து முடித்தமைக்காகவும் 5. நாட்றம்பள்ளி காவல் நிலைய பெண் முதல்நிலை காவலர் கலைச்செல்வி CCTNS-ல் வழக்குகளை விரைந்து பதிவு செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்ததற்காகவும், 6.உமராபாத் காவல் நிலைய முதல் நிலை காவலர் விஜயகுமார் அவர்கள் 5-வருடங்களாக நிலுவையில் இருந்த SC/ST வழக்குகளை நீதிமன்ற கோப்பில் எடுத்து வழக்கு தண்டனை பெற்று தருவதற்கு உறுதுணையாக இருந்தமைக்காகவும் 7.ஆம்பூர் நகர காவல் நிலைய தலைமை காவலர் மோகன்ராஜ் அவர்கள் CCTNS-ல் இந்த வருடத்தில் 212 வழக்குகளை இறுதி அறிக்கை தாக்கல் செய்தமைக்காகவும் 8.உமராபாத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி காவல் நிலையத்தில் சரியான முறையில் பதிவேடுகளை பராமரிப்பு செய்ததற்காகவும், 9. திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய முதல் நிலைக் காவலர் மதியழகன் இரவு ரோந்து பணியின் போது ஆதியூர் மசூதியில் தீப்பற்றி எரிந்த போது தீயினை அணைத்தமைக்காகவும் மற்றும் 10. வாணியம்பாடி நகர காவல் நிலைய எழுத்தாளர் முதல் நிலைக் காவலர் செந்தில்குமார் அவர்கள் காவல் நிலையத்தில் சிறப்பான முறையில் பதிவேடுகளை பராமரிப்பு செய்ததற்காகவும் கூடுதல் காவல் துறை இயக்குனர் முனைவர் K.சங்கர் IPS அவர்கள் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்.

உடன் வடக்கு மண்டல காவல் துறை தலைவர் முனைவர் N.கண்ணன் IPS அவர்களும் வேலூர் சரக காவல் துணை தலைவர் முனைவர் M.S முத்துசாமி IPS அவர்களும் மற்றும் வேலூர், ராணிப்பேட்டை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *