விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதிக்கு உட்பட்ட கோனேரிகுப்பம் பகுதியில் இயங்கி வரும் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 15 வது ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கல்லூரியின் நிர்வாக அலுவலர்செ.சிவா வரவேற்றார்.முதல்வர் முனைவர் மா.வீரமுத்து தலைமை ங்கினார்.அறக்கட்டளையின் முதன்மை நிர்வாக அலுவலர் ப. சிவக்குமார்,பொறியியல் கல்லூரியின் துணை முதல்வர் கோ.பரமகுரு வாழ்த்துரை வழங்கினர்.திரைப்பட நடிகரும் ஒளிப்பதிவாளருமான ம. இளவரசு பல்கலைக்கழக அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கும்,விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் சான்றிதழ்கள் பரிசுகள் மற்றும் கோப்பைகளை வழங்கி பேசுகையில்,மாணவ மாணவியர்கள் அனைவரும் தங்களது பெற்றோர்களிடம் நண்பர்களைப் போல பழக வேண்டுமெனவும், உண்மையாகவும்,நம்பிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றார்.

ஒவ்வொரு தனி மனிதனும் தனது குடும்பத்தை கையாள கற்றுக் கொண்டால் சமூகத்தை எளிமையாக கையாண்டு வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமென்று கூறினார். இறுதியாக பெற்றோர் ஆசிரியர் கழக ஒருங்கிணைப்பாளர் கோ.தண்டபாணி நன்றி கூறினார்.இந்நிகழ்ச்சியில் கல்லூரியில் துறைத் தலைவர்கள்,பேராசிரியர்கள்,அலுவலகப் பணியாளர்கள்,பெற்றோர்கள்,மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *