பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தஞ்சாவூர் மாட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலத்தில்
மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணுவின் மார்பளவு சிலை கபிஸ்தலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியால் திறக்கப்பட்டது.

அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி,
தான் முதல்வராக இருந்தபோது தன்னிடம் எந்த சிபாரிசுக்கும் வராதவர் துரைக்கண்ணு என்றும், இவர் மறைந்த பின் இவருக்கு சிலை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்கு வைத்திலிங்கம் முட்டுக்கட்டை போட்டார் என்றும், சிலை திறப்பு நிகழ்வில் துரோகி பெயர் (வைத்தியலிங்கம்) இடம் பெறக் கூடாது என்பதற்காகவே சிலை தாமதமாக திறக்கப்பட்டுள்ளது, என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
துரைக்கண்ணு அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் உணவு உற்பத்தி 100 லட்சம் டன்னை தாண்டியதற்காக க்ரிஷ் கர்மா விருது பெற்றார் என எடப்பாடி பழனிச்சாமி மேலும் தெரிவித்தார்.

சிலை திறப்பு நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ் ,விஜயபாஸ்கர், சண்முகம், வேலுமணி, முனுசாமி, ஒ எஸ் மணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .

இதனைத் தொடர்ந்து பொது கூட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிச்சாமி ஒரத்தநாடு புறப்பட்டு சென்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *