எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பியன் வேலங்குடி, காருகுடி ஆகிய கிராமங்களில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

விவசாயம் மற்றும் விவசாயக் கூலி தொழிலைச் சார்ந்து வாழும் இவர்களுக்கு குடிநீர், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை. இது குறித்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பெண்கள் எருக்கூர் தேசிய நெடுஞ்சாலை ரவுண்டானா பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள்,சீர்காழி டிஎஸ்பி சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனைத்து துறை அதிகாரிகளை வரவழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *