செய்தியாளர் சத்தியமூர்த்தி

காரமடையில் செயல்பட்டு வரும் வேதாத்திரி மகரிஷியின் உலக சமுதாய சேவா சங்க மனவளக்கலை மன்றத்தில் குழந்தைகளுக்கான பண்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் மனவளக்கலை யோகா பயிற்சிகள் கடந்த மார்ச் மாதம் துவங்கி நடைபெற்று வந்தது.

வார இறுதிநாளான ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடைபெற்ற இந்த சிறப்பு வகுப்புகள் 10 வாரங்கள் நடைபெற்று நிறைவடைந்தது. இதில் எட்டு வயது முதல் 13 வயது வரை உள்ள குழந்தைகள் கலந்து கொண்ட சிறப்பு வகுப்பில் எளிய முறை உடற்பயிற்சிகள், சூரிய நமஸ்காரம், ஏகபாதாசனம், சக்கராசனம் உள்ளிட்ட ஆசனங்களும் பிராணாயாமம், நாடி சுத்தி, தண்டுவட சுத்தி உள்ளிட்ட பயிற்சிகளும் உடல் மற்றும் உள் உறுப்புகளின் விபரங்கள் குறித்த வகுப்புகளும் நடைபெற்றது.

இதையடுத்து நடைபெற்ற நிறைவு விழா நிகழ்ச்சிக்கு மன்றத் தலைவரும் துணை பேராசிரியருமான திரு. ராஜ்குமார் அவர்கள் தலைமை தாங்கினார்,துணைத் தலைவர் திரு மாசிலாமணி அவர்கள் இறை வணக்கம் குரு வணக்கம் பாடி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

செயலாளர் சண்முகசுந்தரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார், துணைப்பேராசிரியர் சுரேஷ்குமார் “தற்கால வாழ்க்கையில் மனவளக்கலையின் பங்கும் அதன் சிறப்பும்” என்ற தலைப்பில் கருத்துறையாற்றினார், பயிற்சியில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு வேதாத்திரி மகரிஷியின் நூல்கள் பரிசாக வழங்கப்பட்டது.

துணைத்தலைவர்கள் சி.என்.ஆர். ராஜேந்திரன், கோபால்சாமி ,துணைப் பேராசிரியர்கள் , சாந்தி, பூங்கோதை, சுமதி, கோமதி.ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை மன்ற பொறுப்பாளரும் துணைப் பேராசிரியருமான திரு முத்து சங்கர் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்,

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *