பா வடிவேல் அரியலூர் செய்தியாளர்

ஜெயங்கொண்டம் அருகே நெடுஞ்சாலை துறையின் சார்பில் கூவத்தூர் முதல் மகிமை புறம் வரை இருவழிதடத்தில் இருந்து நான்கு வழி தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணியினை போக்குவரத்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கூவத்தூர் கிராமத்தில் தொடங்கி கீழக்குடியிருப்பு வரை ரூ.63 கோடி மதிப்பீட்டில் இருவழித்தடத்திலிருந்து
நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணியினை
மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், கூவத்தூர் கிராமத்தில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் விருத்தாசலம் – ஜெயங்கொண்டம் – மதனத்தூர் இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணியினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.ரமண சரஸ்வதி, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தார்கள்.

மாண்புமிகு முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைமையிடத்தை இணைக்கும் வகையில் சுமார் 2500 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளை பகுதிவாரியாக இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக தரம் உயர்த்துதலில், நடப்பு நிதி ஆண்டில் (2022-2023) சுமார் 150 கி.மீ நீளம் உள்ள சாலைகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், கூவத்தூர் கிராமத்தில் அரியலூர் நெடுஞ்சாலைக் கோட்டம், ஜெயங்கொண்டம் உட்கோட்டத்தில் மூலம் மாண்புமிகு முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.63 கோடி மதிப்பீட்டில் விருத்தாசலம் – ஜெயங்கொண்டம் – மதனத்தூர் சாலை கி.மீ 21/10 – 22/6 (SH 140) வரை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி, மேம்பாடு செய்தல் மற்றும் கி.மீ.26/10 சிறுபாலத்தை திரும்பக் கட்டுதல், வடிகால், தடுப்புச்சுவர் மற்றும் சென்டர் மீடியன் கட்டுதல், கல்வெட்டுகள் அகலப்படுத்தும் பணியினை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.

மேலும், இச்சாலை மேம்படுத்துவதன் மூலம் கூவத்தூர், தண்டலை, கல்லாத்தூர் மற்றும் கீழக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறுவார்கள். எனவே, இச்சாலை பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து சாலையின் இருபுறமும் தற்போது உள்ளது போல் பசுமையான மரங்களை நட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் உத்திராண்டி, உதவி கோட்டப் பொறியாளர் கருணாநிதி, உதவி பொறியாளர் விக்னேஷ்ராஜ், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *