தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர்

திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்ட 12.11 கோடி மதிப்பிலான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை காணொளி காட்சி மூலமாக முதல்வர் துவங்கி வைத்தார்

திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சிறிய கட்டிடத்தில் இயங்கி வந்தது. புதியதாக கட்டிடம் கட்ட தமிழக முதல்வர் 2020-ஆம் ஆண்டு உத்தரவிட்டு அதற்கான நிதியை ஒதுக்கி இருந்தார். அதன் அடிப்படையில் சுமார் 12.11 கோடி மதிப்பீட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து பணி நடைபெற்றது.

தற்போது பணி முழுமையாக முடிந்த பிறகு இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் மற்றும் பல்வேறு கட்சியைச் சார்ந்த பிரமுகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் ஆனது பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டதாக உள்ளது. 13 பேர் செல்லக்கூடிய லிப்ட் வசதி ஜெனரேட்டர் வசதி அனைத்து அலுவலக அறைகளுக்கும் குளிர்சாதன வசதி எல்இடி விளக்குகள், சிசிடிவி கேமராவில் பொருத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து ஏற்பாடுகளும் இந்த கட்டிடத்தில் செய்யப்பட்டுள்ளது இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தனித்தனியே பார்க்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *