கொளத்தூர் செய்தியாளர்
அகமதுஅலி

சென்னை முட்டுக்காட்டில், மத்திய அரசின் சமூக நீதித்துறையின் கீழ் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்கான தேசிய நிறுவனம் (NIEPMD) கடந்த அக்டோபர் மாதம் மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தி, மொபிஸ் இந்தியா அறகட்டளையுடன் இணைந்து அந்நிறுவனத்தின் நிறுமச் சமுதாய பொறுப்புத் திட்டத்தின் கீழ், 150 மாற்றுத்திறனாளிகளுக்கு நியோமோஷன் விசையுந்துகளை வழங்க முன்வந்தனர்.

அதைத் தொடர்ந்து, 23 மாற்றுத்திறனாளிகளுக்கு, உலகளாவிய அணுகல் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு 23 லட்ச ரூபாய் மதிப்பிலான நியோமஷன் விசையுந்துகள் வழங்கப்பட்டது.

மொபிஸ் இந்தியா அறக்கட்டளையின் சமுதாய பொறுப்புத் திட்டத்தின் (CSR) கீழ் இந்த நல்முயற்சி அரங்கேறியது.
திரு.அருன் குமார்(IRS),துணை கமிஷனர் வருமானவரித்துறை,நிதி அமைச்சகம்,
NIEPMD பொதுச்சபையின் முன்னாள் உறுப்பினரான வழக்கறிஞர் திரு. ஏ. மகேந்திரன், வழக்கறிஞர் முனைவர் அபிநயா , ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள், மாற்றுத்திறனாளி நல சங்கங்கள் மேலும் இந்நிகழ்ச்சியில் உலகளாவிய அணுவல் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களுக்கு உண்டான மாற்றத்திறனாளிகள் நலச் சட்டம் 2016 பற்றியும்,மாற்றுத்திறனாளிகளுக்கு உண்டான சட்டங்கள் குறித்தும் அவர்களுக்கு அரசால் வழங்கப்படும் சலுகைகள் குறித்தும் வழக்கறிஞர் அபிநயா விளக்கினார்.

இதுபோன்ற நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகள் தனித்து செயல்படவும் பிறரின் உதவியை எதிர்ப்பார்க்காமல் தாங்களே சுயமாக பயணிக்கவும் பெரிதும் உதவும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *