நாமக்கல்

ஓ. பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் என். பி எஸ் (எ) நாமக்கல் எம் பழனிச்சாமி தலைமையில் நாளை 20.05.2023 சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில் நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள முல்லை நகரில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது

அது சமயம் சிறப்பு அழைப்பாளரர்களாக வைத்தியலிங்கம் , கு .ப. கிருஷ்ணன், ஜே. சி .டி பிரபாகரன், பி. எச். மனோஜ் பாண்டியன் வா .புகழேந்தி, மருது. அழகுராஜ் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளார்கள்

அதைத் தொடர்ந்து நாமக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் அதே நாமக்கல் – மோகனூர் சாலையில் உள்ள இளங்கோ திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது

இந்த நிகழ்ச்சிக்கும் நாமக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் என் .பி .எஸ் (எ) நாமக்கல் எம் பழனிசாமி தலைமை வகிக்கிறார்

முன்னாள் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக அமைப்பு செயலாளர் சி. சந்திரசேகரன் வரவேற்று பேசுகிறார்

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் கு. ப.கிருஷ்ணன் ,அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஜேசிடி. பிரபாகரன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் பி. மனோஜ் பாண்டியன், அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் வா. புகழேந்தி மற்றும் ஒரு அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர் மருது .அழகுராஜ் ஆகியோர் சிறப்புரையாற்று உள்ளார்கள் இதில் கொங்கு மண்டல மாவட்டங்களின் நிர்வாகிகளும் பக்கத்து மாவட்டங்களில் நிர்வாகிகளும் கலந்து கொள்ள உள்ளார்கள்

இறுதியில் நாமக்கல் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் எம். சரவணன் நன்றியுரையாற்றுகிறார் அடுத்து குமாரபாளையம் அதைத் தொடர்ந்து ஈரோடு ஆகிய இடங்களிலும் அதிமுக செயல்கள் கூட்டம் நடைபெற உள்ளது

இந்த செயல் வீரர்களின் கூட்டத்தின் முக்கிய நோக்கமாக நாமக்கல், சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட கோவை மண்டலத்தில் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் கொங்கு மண்டல அஇஅதிமுக மாநாடு எந்த இடத்தில் நடத்துவது என்று குறித்து இடம் தேர்வு செய்வதற்கும் அந்த மாநாட்டிற்கு அனைத்து தொண்டர்களையும் அழைத்து வந்து வெகு சிறப்பாக நடத்திக் காட்ட வேண்டும் என்கின்ற நோக்கத்திலும் இந்த ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட இருக்கிறது என்று நாமக்கல் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் என், பி .எஸ்.(எ) நாமக்கல் எம் பழனிசாமி தெரிவித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *