வலங்கைமான் அருகில் உள்ள ஆலங்குடி அபய வரதராஜப்பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இருந்த ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு ரூ 1கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு அறநிலையத்துறையின் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகில் உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயில் நிர்வாகத்திற்குட்பட்டது. ஆலங்குடி அபய வரதராஜப்பெருமாள் கோயில் இக்கோயிலுக்கு சொந்தமான காலி மனைகள், குடியிருப்புகள் கோயிலுக்கு அருகில் உள்ளது.

இதில் புல எண் 56/41 ல்0. 11சென்ட் மற்றும் புல எண் 56/42 ல்0. 26 சென்ட் பரப்பளவு சொத்து நாகப்பட்டினம் இணை ஆணையர் நீதிமன்ற வழக்கு உத்திரவின் படி ஆக்கிரப்புகள் அகற்றப்பட்டு கையகப்படுத்தப்படும் பணி தொடங்கியது.

அப்போது அந்த இடத்தை தன் வசம் வைத்திருந்த கருப்பையா இடத்திற்குரிய ஆவணங்கள் தங்கள் வசம் உள்ளது. நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளோம் என தெரிவித்ததோடு அறநிலையத்துறையக்கு சொந்தமான இடம் என்பதற்கான தகவல் பலகை வைக்கக்கூடாது என அதிகாரிகளிடம் வாதிட்டார்.

உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால், கருப்பையா வின் வாதத்தை ஏற்க அறநிலையத்துறையின் அதிகாரிகள் மறுத்தனர். அப்போது கருப்பையா மற்றும் அவரது உறவினர்கள் அதிகாரிடம் வாதிட்டனர். வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாவிடம் ஆக்கிரப்புகள் அகற்றி உதவுமாறு அறநிலைய உதவி ஆணையர் கேட்டுகொண்டார்.

இதையடுத்து கருப்பையா வின் ஆவணங்கள் ஏதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அதிகாரிகள் தெரிவித்துடன், ஆக்கிரப்புகளை கோயில் பணியாளர்களை கொண்டு அறநிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் அகற்றினர். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடம் அறநிலையத்துறையக்கு சொந்தமானது என்று தகவல் பலகையும் அங்கு
வைக்கப்பட்டது.

இந்த பணியின் போது குரு பரிகார கோயில் கண்காணிப்பாளர் அரவிந்தன், கோயில் நிர்வாக அதிகாரிகள் மாதவன், மணிகண்டன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது கோயில் நிர்வாகத்தின் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தின் சந்தை மதிப்பு ரூ 1 கோடியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *