பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் அம்மாபேட்டை சரக்கத்திற்கு இறுதி நாளாக ஜமாபந்தி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு பிரித்து வழங்கி உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


அதனைதொடர்ந்து கடந்த 6 நாட்களாக நடைபெற்ற ஜமாபந்தி 967 மனுக்கள் பெறப்பட்டு 312 மனுக்கள் ஏற்கப்பட்டு 255 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர்.


இறுதி நாளாளில் வருவாய் தீர்வாயத்தில் பெறப்பட்ட மனுக்களில் சமூக பாதுகாப்பு திட்ட பயனாளிகள் 54 நபர்களுக்கும் 23 பயணாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களும் பத்து நபர்களுக்கு தனிப்பட்டாவும் 57 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணையும் இரண்டு பயனாளிகளுக்கு வாரிசு சான்றிதழும் ஒரு நபருக்கு மின் இணைப்பு சான்றிதழும் 6 பயனாளிகளுக்கு இறப்பு சான்றிதழும்18 பயனாளிகளுக்கு இருளர் சாதி சான்றும் ஒரு பயனாளிக்கு விதவை சான்றும் ஒரு பயனாளிக்கு ஒருங்கிணைந்த சான்றும் 10 பயனாளிகளுக்கு தையல் இயந்திரமும் வேளாண்மை துறை சார்பில் ஒரு பயனாளிக்கு வயலில் மருந்து தெளிப்பான் இயந்திரமும் என மொத்தம் 184 பயாணிகளுக்கு 1.50000 இலட்சம் மதிப்பீட்டில் உதவித்தொகை மற்றும் ஆணைகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.

இவ்விழாவில் மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன் பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் பாபநாசம் வட்டாச்சியர் பூங்கொடி மாவட்ட துணைச் செயலாளர் கோவி.அய்யாராசு பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர் பாபநாசம் பேரூர் செயலாளர் கபிலன் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *