அரியலூர்: அரியலூர் கோவை கிருஷ்ணா கூட்ட அரங்கில் பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள சோழகங்கம் எனப்படும் பொன்னேரியை தூர்வாரி, சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்காக கடந்த திமுக ஆட்சியில் ரூ.19.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் முறைகேடு நடைபெற்றுள்ளது.
தற்போதைய தவெக ஆட்சியில் தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் மாயமாவது உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற குற்றச் சம்பவங்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதில் அரசுக்கு திறன் இல்லை. இதே நிலை நீடித்தால் மக்களே இந்த ஆட்சியைத் தூக்கி எறிவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பேட்டியின்போது பாஜக அரியலூர் மாவட்டத் தலைவர் பரமேஸ்வரி ஆனந்தராஜ், நகரத் தலைவர் தன்ராசு, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் முத்துவேல், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் பூண்டி வெங்கடேசன், நகரப் பொதுச்செயலாளர் செந்தில்குமார், மாவட்டப் பொருளாளர் முருகானந்தம், வழக்கறிஞர் செந்தில், பொறியாளர் அன்பழகன், ஒன்றியத் தலைவர்கள் கலியமூர்த்தி, சுதாகர், கொல்லாபுரம் ஒன்றியத் தலைவர் ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.