நாமக்கல் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க 88383 52334 என்ற அலைபேசி எண்ணிற்கு நேரடியாகவும், வாட்சப் மூலமாகவும் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் –
கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்
மருத்துவர் ச.உமா, தகவல்.

கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக, மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், மாவட்ட அளவில் ஒவ்வொரு திங்கட்கிழமையும், மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் காவல் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மாவட்ட மேலாளர் ஆகியோரைக் கொண்டு நடத்திட வேண்டுமென்று, தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

அதனடிப்படையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக, மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் (23.05.2023) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வருவாய் துறை, காவல் துறை, டாஸ்மாக், வனத்துறை, கலால் துறை, சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பாக சம்மபந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களிடம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விவரங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ். உமா தெரிவித்ததாவது:-

கள்ளச்சாராயம் மற்றும் சட்ட விரோத மதுபானம் விற்பனை ஈடுபடுவர்களின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இம்மாதிரி போலி மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராயங்கள் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வாராந்தோறும் ஒவ்வொரு அலுவலர்களும் இப்பணியில் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். போலி மதுபானங்கள் விற்பனை செய்வது தொடர்பாக வரப்பெறும் புகார்கள் மீது உடனுக்குடன் சம்பந்தப்பட்ட கள அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் வேண்டும். சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது புகார்கள் அளிக்க மாவட்ட மது விலக்கு அமலாக்கப்பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கட்டுபாட்டில் செயல்படும் 88383 52334 என்ற அலைபேசி எண்ணிற்கு நேரடியாகவும், வாட்சப் மூலமாகவும் தங்களது புகார்களை தெரிவிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ். உமா தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு) ராஜூ, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன், திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் .கௌசல்யா, மாவட்ட மேலாளர் டாஸ்மாக் கமலக்கண்ணன் ஆகியோர் உட்பட காவல் துறை, வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *