வெ.முருகேசன் செய்தியாளர் திண்டுக்கல்

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர்
திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சி எம்.வி.எம் நகரில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூபாய் 132.52 கோடி மதிப்பீட்டில் திண்டுக்கல் மாநகராட்சி, 6 பேரூராட்சிகள் மற்றும் 6 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 636 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் மறு சீரமைப்பு பணிகள் மற்றும் திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் ரூபாய் 26.40 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வடிகால் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகளுக்கும்,
ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை கொல்லப்பட்டி அருகில் ஒட்டன்சத்திரம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூபாய் 1368.00 கோடி மதிப்பீட்டில் ஒட்டன்சத்திரம் நகராட்சி, 2 பேரூராட்சிகள் மற்றும் 7 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 1422 ஊரக குடியிருப்புகளுக்கான புதிய கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து
ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, கன்னிவாடி பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி வரவேற்புரையாற்றினார்.
இவ்விழாவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் வ.தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, பேரூராட்சிகளின் இயக்குநர் கிரண் குராலா,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேலுச்சாமி, ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஐ.பி.செந்தில்குமார், காந்திராஜன்,மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ், துணை மேயர் ராஜப்பா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *