பல்லடம் அருகே விவசாய நிலத்தில் சாயப்பட்டறை கழிவுகளை கொட்டுவதால் நீர் ஆதாரம் பாதிப்படைவதாக கூறி விவசாயி வேதனை நடவடிக்கை எடுக்க கோரி அரசுக்கு கோரிக்கை


திருப்பூர் மாவட்டம் பல்லடம் காடுவெட்டி ரங்கன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் குமார் விவசாயியான இவர் கால்நடை வளர்ப்பு தொழிலும் ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் இவரது தோட்டத்தின் அருகில் மர்ம நபர்கள் சிலர் சாயப்பட்டறை கழிவுகளை மண்ணைத் தோண்டி உள்ளே புதைத்து மூடி விட்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது

இதன் காரணமாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசியதை கண்ட பிரகாஷ் குமார் மற்றும் குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தபோது அங்கு சாயப்பட்டறையில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் மண்ணில் புதைக்கப்பட்டது தெரியவந்தது

இதன் காரணமாக பிரகாஷ் குமாரின் தோட்டத்தில் உள்ள ஆழ்துளை கிணறுகளில் நீரின் அளவு குறைந்ததாகவும் மேலும் கால்நடை வளர்ப்பில் பிரகாஷ் குமார் ஈடுபட்டு வருவதால் கால்நடைகள் குடிப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலையில் இருப்பதாகவும் வருத்தம் தெரிவித்துள்ளார் எனவே இது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இது போன்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.

பல்லடம் செய்தியாளர் கே த தாமோதரன் செல் நம்பர் 98 42 42 75 20

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *