நாமக்கல் மாவட்டத்தில் மத்திய பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனையை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் ஏ. நாராயணசாமி இன்று கலந்து கொண்டார்.
பின்னர் , நாமக்கல் மாவட்ட பா.ஜ க. அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சர் ஏ. நாராயணசாமி,

தமிழகத்தில் நான்கு நாள் பயணமாக மதுரை திண்டுக்கல் நாமக்கல் உள்ளிட்ட ஆகிய மாவட்டங்களில் மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் வளர்ச்சி திட்ட பணிகள் வீடுகள் தோறும் சென்று பயனளித்துள்ளன.

பிரதம மதியின் அனைவருக்கும் வீடு திட்டம் ஊரகப் பகுதிகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் நகரப் பகுதிகளில் இத்திட்டம், இன்னும் முழுமையாக செயல்படுத்த வேண்டும். இதுவரை பார்வையிட்ட இடங்களில் நகரப் பகுதிகளில் பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் தரமற்ற முறையில் கட்டப்பட்டுள்ளது.

ஜல் ஜீவன் குடிநீர் திட்ட பணிகளில் மதுரை திண்டுக்கல் நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் திட்டம் என்னும் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். இதுவரை பார்வையிட்டதில் தரமற்ற பொருட்களைக் கொண்டு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் சேகரமாகும் நீருக்காக தனியாக சோக் பிட்டு அமைக்க வேண்டும். அதனை சமூக நீர் சேகரிப்பு மையமாகவும் அமைக்க வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை வழங்கி உள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் 4 உயர் மட்ட பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் வள்ளிபுரம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி அளித்த திட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டடம் மற்றும் அங்கன்வாடி மைய கட்டிடங்கள் சிறப்பாக கட்டுமான பணிகள் நடந்துள்ளன. இவற்றை நல்ல முறையில் கட்டி உள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு பெறுவதற்கு கட்டணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது முற்றிலும் மத்திய அரசு பட்டம் இலவச குடிநீர் இணைப்பு திட்டமாகும்.

இத்திட்டத்தில் உப்பு நீர் கலக்காத தரமான நீர் பரிசோதனை செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும்.

பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு கடந்த 9 ஆண்டுகளில் அனைவருக்கும் பார்வையோடு நல் ஆளுகை அரசாங்கமாக திகழ்ந்து செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் ஜல்ஜீவன் குடிநீர் திட்டம், பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றில் முறையாக திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் ஊழல் நடந்துள்ளது எனது ஆய்வின் போது கள ஆய்வின்போது தெரியவந்துள்ளது.

அதேபோல பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் சுகாதார திட்டத்தையும் மாநில அரசு பெயரை மாற்றி தமது திட்டம் போல செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை மாநில அரசு முறையாக செயல்படுத்தவில்லை.

எனவே இந்த குறைபாடுகளை கண்டறிய அதன் மீது நடவடிக்கை எடுக்க ஒரு குழுவை அனுப்பி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளோம். எனது கள ஆய்வு குறித்த தகவல்களை பிரதமருக்கு வழங்க உள்ளேன்.

அரசியல் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய இணை அமைச்சர் எ. நாராயணசாமி 17 கட்சிகள் ஒன்று கூடி பாட்னாவில் கூட்டம் நடத்தியுள்ளது எவ்வித பயணம் தராது. அவர்கள் ஏற்கனவே இது போன்ற கூட்டங்களை நடத்தி இருந்தாலும் பிரதமர் வேட்பாளர் யார் என்று அவர்களால் அறிவிக்க முடியவில்லை. எனவே அந்த கூட்டணி ஒருபோதும் நிலைக்காது. இந்த கூட்டம் பாஜக வெற்றிக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.

பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய தெளிவான தொலைநோக்கு சிந்தனை, நல்ல ஆளுமை அரசு ஆகியவற்றால் இந்தியாவின் பல மாநிலங்களில் நாங்கள் வெற்றியை சந்தித்து வருகிறோம்.
இந்தியாவில் மட்டும் உள்ளது உலக அளவில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல் திட்டங்கள் வரவேற்பு பெற்றுள்ளன என்றும் நாமக்கலில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணைய அமைச்சர் ஏ. நாராயணசாமி செய்தியாளர் இடம் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே .பி .ராமலிங்கம், நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர் என். பி. சத்தியமூர்த்தி, மருத்து பிரிவு மாநில தலைவர் டாக்டர் எஸ். டி. பிரேம்குமார், செயலாளர் டாக்டர் ஷியாம் சுந்தர், கோவை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் எம். சுவாமி தயாளன், மாவட்ட பொருளாளர் செந்தில் நாதன், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *