தென்காசி மாவட்டத்தில் குடிநீர் குழாய்கள் உடைப்பு – சீரமைப்பதில் முறைகேடுகள் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் பரபரப்பு புகார்

தென்காசி மாவட்டத்தில் கனரக வாகனங்களினால் ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்புகளை சீரமைப்பதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் கே.ரவிஅருணன் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டத்தில் கனரக வாகனங்கள் அதிக எடையுடன் சாலையில் செல்வதால் ஆங்காங்கே குடிநீர் திட்டங்கள் உடைப்பு ஏற்பட்டு அது நீண்ட காலமாக அடைக்கப்படாமல் தண்ணீர் வீணாக விரயம் ஆகிறது எதனால் உடைப்புகள் சீர் செய்யப்படவில்லை என்பதை ஆய்வு செய்து பார்த்தால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வருகின்றன

தென்காசி மாவட்டம் முழுவதையும் கூட்டு குடிநீர் திட்டங்களை பராமரிப்பு செய்வதற்காக ஒரே நபருக்கு பல கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது

இந்த நபர் எந்த உடைப்புகளையும் சீர் செய்யாமல் கோடிக்கணக்கான ரூபாய்களை அபகரித்து வருகின்றார் இது சம்பந்தமாக இயற்கை வள பாதுகாப்பு சங்கம் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் இது சம்பந்தமான விபரங்களை பெற்று விரைவில் வெளியிடுவோம்

எனவே தென்காசி மாவட்ட நிர்வாகம் உடனடியாக குடிநீர் குழாய்கள் உடைப்புகளை சீர் செய்ய ஒரே நபருக்கு வழங்கிய டெண்டரை ரத்து செய்து
ஆங்காங்கே உடைந்து வருட கணக்கில் செல்கின்ற உடைப்புகளை சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இந்த கோடை காலத்தில் பல ஊர்களில் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர் ஆனால் இந்த உடைப்புகளின் காரணமாக குடிநீர் தெருக்களில் வீணாக சென்று கொண்டிருக்கிறது.இதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் சென்று வழி எங்கிலும் ஆய்வு செய்ய வேண்டும்

இந்த டெண்டரை ரத்து செய்வதோடு மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் இந்த உடைப்புகள் அனைத்தையும் போர்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும்

உடனடியாக மாவட்ட நிர்வாகம் இதை செய்ய தவறினால் இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் விரைவில் நடைபெறும் என்று இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும் தென்காசி அம்பாசமுத்திரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான
கே.ரவிஅருணன் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *