வலங்கைமான் பேரூராட்சி 14- வது வார்டில் வீடு இடிந்த 2 குடும்பத்தினர்களுக்கு பேரூர் திமுக சார்பில் நிவாரண பொருட்கள் உதவி வழங்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட 14- வது வார்டு கோவில் பத்து நடுத்தெருவில் உள்ள கருணாநிதி என்பவர் வீடு கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சுவர் இடிந்து விழுந்தது, அதேபோல் அந்த பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டின் சுவர் மழைநீர் தேங்கி நிற்கும் நிலையில் கற்கள் பெயர்ந்து விழுந்து வரும் நிலையில் எப்போது விழம் என்ற ஆபத்தில் உள்ளது.
இந்த இரண்டு வீடுகளையும் தகவலறிந்த வலங்கைமான் பேரூர் திமுக செயலாளர் பா. சிவநேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க.தனித்தமிழ்மாறன், 14- வார்டு திமுக செயலாளர் செல்வமணி, முன்னாள் கவுன்சிலர் மாரிமுத்து ஆகியோர் இரண்டு குடும்பங்களுக்கும் திமுக சார்பில் அரிசி, வேட்டி, சேலை, பிஸ்கட் பாக்கெட்கள் வழங்கி ஆறுதல் கூறினார்கள். தொடர்ந்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.