பாபநாசத்தில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 49 வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மற்றும் தொழிலாளர் அணிகள் சார்பில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அன்பழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கினார் .
தொடர்ந்து 49 வது நாள் உணவு வழங்கும் நிகழ்வு மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் பாலை அனிபா ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், பாபநாசம் நகர செயலாளர் கபிலன், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் குமார், பாபநாசம் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், பாபநாசம் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், சிறுபான்மையினர் அணி மாவட்ட துணைச் செயலாளர் ராயல் அலி , மாவட்ட பிரதிநிதி ராமபிரபு, வழக்கறிஞர் வெற்றிச்செல்வன்,ஒன்றிய அயலக அணி அமைப்பாளர் அக்கீம் ராஜா, நிர்வாகிகள் கணேஷ்,வீரமணி,சித்திக்,உதயா தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் சக்திவேல் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.