கரூர் செய்தியாளர் மரியான் பாபு
அன்புமணி மீது சட்ட நடவடிக்கை பாயும் பாமக மேற்கு தெற்கு மண்டல செயலாளர்கள் பிஎம்கே பாஸ்கரன் பேட்டி..
கரூரில் மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியின் மேற்கு மற்றும் தெற்கு மண்டல செயலாளர் பிஎம்கே பாஸ்கரன் கரூரை அடுத்துள்ள தாந்தோணி மலை பகுதியில் அவரது இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது பாமக கட்சியில் தற்போது நடைபெற்று வரும் விரும்பத்தகாத நிகழ்ச்சிகள் அனைவரும் அறிந்ததுதான் என்ற அவர், கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலிருந்து மூன்றாண்டுக்கு தலைவராக செயல்படுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி சட்ட விதிகளின்படி ஒப்புதல் அளித்தது.
ஆனால்,அந்த ஆவணத்தை திருத்தி தேர்தல்ஆணையத்தில் 2023 ஆம் ஆண்டு தன்னை தலைவராக தேர்ந்தெடுத்ததாக பொய்யானஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்து இன்னும் ஓராண்டுக்கு தலைவராக நீடிப்பார் என்ற உத்தரவை தேர்தல் ஆணையத்தில் அன்புமணி பெற்றுள்ளார்.சட்டப்படி நடப்பாண்டு மே மாதத்திலே அவரது தலைவர் பதவி காலாவதி ஆகிவிட்டது.
இதனை சுட்டிக்காட்டி 2022 ஆம் ஆண்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பான ஆவணங்களை கட்சியின் தலைவர் ராமதாஸ் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் சமர்ப்பித்துள்ளார்.
ஆனால் அதனையும் மீறி தேர்தல் ஆணையத்தில் லஞ்சம் கொடுத்தோ அல்லது தனது செல்வாக்கை பயன்படுத்தியோ அன்புமணி மீண்டும் ஒரு ஆண்டுக்கு தலைவராக செயல்படுவதற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதனைநீதிமன்றத்தில் நாங்கள் நிரூபிப்போம். அப்போது அன்புமணி தண்டனை பெறும் குற்றவாளியாக இருப்பார் என தெரிவித்தார்.
மேலும் வருகிற டிசம்பர் 30ஆம் தேதி சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது எனவும், இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்தார். அதேசமயம் அன்புமணியும் அவரது ஆதரவாளர்களும் ஏற்கனவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்கள் அதனால் அவர்களைப் பற்றிய பேச்சுக்கு இங்கு இடமில்லை எனவும் தெரிவித்தார்.