அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு பிரிவு இணைந்து நடத்திய பேரணியை கலெக்டர் பொ ரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்
மாவட்ட ரெட் கிராஸ் தலைவர் செ ஜெயராமன் பேரணிக்கு தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் ஆ சண்முகம் அனைவரையும் வரவேற்று பேசினார் பேரணி அரியலூர் அண்ணா சிலையிலிருந்து தொடங்கி தேரடி சத்திரம் பேருந்து நிறுத்தம் வழியாக நிர்மலா மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சென்றடைந்தது
பேரணியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அலுவல் சார் துணைத் தலைவர் எஸ் வேத லட்சுமி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலர் தி மணிவண்ணன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மா ரேணுகோபால் மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு திட்ட மேலாளர் சுமதி முன்னாள் ரெட் கிராஸ் மாவட்ட தலைவர் அரியலூர் நல்லப்பன் ஆசிரியர் யூத் ரெட் கிராஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா ஸ்டீபன் மாவட்ட துணைத் தலைவர் எஸ் எம் சந்திரசேகர் நியமன துணைத்தலைவர் க. செல்வராஜூ மாவட்ட கன்வினர் சி சிவசங்கர் மாவட்ட துணை புரவலர் சகானா காமராஜ் சுகாதார ஆய்வாளர் வகீல் பள்ளி துணை ஆய்வாளர் இரா. பழனிசாமி முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பி பன்னீர்செல்வம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்தியன் ரெட் சொசைட்டி அரியலூர் மாவட்ட பொருளாளர் இ. எழில் அனைவருக்கும் நன்றி கூறினார்